South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Friday, July 24, 2020
நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பதிவு: ஜூலை 24, 2020 03:55 PM
புதுடெல்லி,
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதிமுக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள், நிர்வாகத் தோல்விகள் குறித்து விவாதிக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
பதிவு: ஜூலை 24, 2020 03:35 PM
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் திங்கள்கிழமை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 4 மாத கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அதே சமயம் இத்தகைய கொரோனா பேரிடர் காலத்தை பயன்படுத்தி அதிமுக அரசு மோசடிகளை செய்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக அதிக மின்சார கட்டணம் வசூலித்தல், கொரோனா மரணத்தில் பொய் கணக்கு எழுதுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக அரசு மீது முன்வைக்கப்படுகின்றன.
Thursday, July 23, 2020
"M.K.Stalin's family was the first millionaire family in Tamil Nadu" - K...
தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா
பதிவு: ஜூலை 23, 2020 06:30 PM
சென்னை,
தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பதில்
பதிவு: ஜூலை 23, 2020 04:10 PM
சென்னை,
கொரோனா மரணத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
அதிமுக அரசு கொரோனா மரணங்களை மறைத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
பதிவு: ஜூலை 23, 2020 03:50 PM
சென்னை,
அதிமுக அரசு கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களை மறைத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனா தனது சுயாதீன விண்கலத்தை இன்று வெற்றிகரமாக அனுப்பியது
பதிவு: ஜூலை 23, 2020 03:20 PM
பீஜிங்,
செவ்வாய் கிரக ஆய்வு போட்டியில் சீனா தனது முதல் சுயாதீன விண்கலத்தை இன்று வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.
செவ்வாய் கிரக ஆய்வில் போட்டி
சீனா இன்று செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. சீனாவின் மிகப்பெரிய கேரியர் ராக்கெட், லாங் மார்ச் 5 மூலம் மதியம் 12:41 மணிக்கு அனுப்பியது. தெற்கு தீவான ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பியது.
செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் வகையில் ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் லேண்டர் மற்றும் அங்கு பயணித்து ஆராய்ச்சி செய்யும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய டினாவென் - 1 என்ற சீன விண்கலம் லாங்மார்ச் 5 ராக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
DMK, AIADMK cannot win without allies’ support: CPI(M) State secretary K...
TN CM EPS and OPS in Siddha hospital chennai
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
1 crore seed balls for the Ramanathapuram National Academy School