Wednesday, June 17, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக இன்று 2 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.


சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு - தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் உத்தரவு

முழு ஊரடங்கு அமலாகவுள்ள சென்னை மற்றும் 3 மாவட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். நகர காவல் எல்லையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்படும். பொதுமுடக்கத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.