Thursday, July 9, 2020

குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள்- வெளிநாட்டு வாழ் சீனர்களுக்கு எச்சரிக்கை

மொத்த குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள் வெளிநாட்டி வசிக்கும் சீனர்களை குறிவைத்து சீனா நரி வேட்டை என்ற பெயரில் ரகசிய திட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டபர் ரே, இந்த விவகாரம் தொடர்பில் தமது பார்வைக்கு வந்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சீனா அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் உளவு செயல்பாடுகளில் எஞ்சிய நாடுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தமிழகத்தில் இன்று (ஜூலை 09) புதிதாக 4,231 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று (ஜூலை 09) புதிதாக 4,231 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆகவும், பலி எண்ணிக்கை 1,765 ஆகவும் அதிகரித்துள்ளது.