பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 15, 2025, ஐப்பசி 29, விசுவாவசு வருடம் 06-20: AMபாட்னா,
பிஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
தேர்தல் சமயத்தில் பிஹார் பக்கமே எட்டி பார்க்காமல், கடமைக்கென வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் - எம்.பி., ராகுலை நம்பிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, மண்ணை கவ்வினார்.
'தேர்தல் வியூக வகுப்பாளர்; பல கட்சிகளை வெற்றி பெறச் செய்தவன்' என, மார்தட்டிய பிரசாந்த் கிஷோரை, பீஹார் மக்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பினர். பீஹாரில் மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின், அதிகபட்சமாக 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பிஹாரில் 243 தொகுதிகள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
இதில் பாஜக 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 தொகுதிகளில் வெற்றி பெற்றன. அறுதிப் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தே.ஜ.கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலைவிட ஆளும் கூட்டணிக்கு கூடுதலாக 77 இடங்கள் கிடைத்துள்ளன.
மெகா கூட்டணிக்கு பெரும் பின்னடைவுமெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4, ஐஐபி 3 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் 25, காங்கிரஸ் 6, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 2, மார்க்சிஸ்ட் 1, ஐஐபி 1 தொகுதியில் வெற்றி பெற்றன. மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது மெகா கூட்டணி 75 இடங்களை இழந்துள்ளது.
64 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பகுஜன் சமாஜ்கட்சி ஒரு இடத்தில் வென்றது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஆம் ஆத்மிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.
துணை முதல்வர்கள்சாம்ராட் சவுத்ரி (தாராபூர்), விஜய்குமார் சின்ஹா (லக்கிசாராய்) வெற்றி பெற்றனர். ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் (ராகோபூர்)14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பிஹார் முதல்வராக 10-வது முறையாக நிதிஷ் மீண்டும் பதவியேற்க உள்ளார்.
பிரதமர் மோடி தனது சமூக வலைதளப்பதிவில், ‘‘நல்லாட்சி, வளர்ச்சி, சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை சாத்தியமாக்கிய நிதிஷ் குமார், சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மாஞ்சி, உபேந்திர குஷ்வாகாவுக்கு பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என்ன? 01. சட்டசபை தேர்தலுக்கு முன்பே, அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., சார்பில், ஜாதி மதிப்பீடு நடத்தப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், தேர்வு செய்யப்படும் வேட்பாளர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் பா.ஜ., மிகுந்த கவனத்துடன் இருந்தது. இதன் அடிப்படையில் தான், வேட்பாளர் தேர்வும் இருந்தது.
02. கடந்த 2020 சட்டசபை தேர்தலில், சிராக் பஸ்வானால் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த பா.ஜ., மேலிடம், சிராக்கின் அனைத்து கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்தது.
03. அனைத்து தொகுதிகளிலும் கட்சி சார்பில் அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொண்டர்களிடையே மன உறுதியை பா.ஜ., ஏற்படுத்தியது.
04. மற்ற மாநிலங்களை போலவே, மோடி - நிதிஷ் குமார் ஆகியோரை முன்னிறுத்தியே தேர்தலை பா.ஜ., எதிர்கொண்டது.
05. கடந்த, 2020 தேர்தலில், மகத், ஷாபாத் பிராந்தியங்களில் ராஜ்புத், குஷ்வாகா சமூகங்களிடையே பிரிவினை ஏற்பட்டதால், அப்பிராந்தியத்தில் உள்ள, 24 தொகுதிகளில், 2ல் மட்டுமே தே.ஜ., கூட்டணி வென்றது. இந்த தேர்தலில், ராஜ்புத், குஷ்வாகா ஓட்டுகளை ஒருங்கிணைக்க பவன் சிங் மற்றும் உபேந்திர குஷ்வாகா போன்ற தலைவர்களை பா.ஜ., பயன்படுத்தியது.
06. கிராமப்புறங்களில் மக்களுக்கு உடனடி தீர்வு தேவை என்பதை உணர்ந்த பா.ஜ., ரேஷன் பொருட்களை வழங்கியதோடு, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அடிப்படை உதவிகளையும் செய்தது. ஆனால், இலவசம் என்ற வார்த்தையை பா.ஜ., பயன்படுத்தவே இல்லை.
07. பிரசாந்த் கிஷோரை பா.ஜ., வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை. அவரை பற்றி பேசி வீண் விளம்பரம் கொடுக்க அக்கட்சி மேலிடம் விரும்பவில்லை.