Sunday, June 28, 2020

Indian National League Demonstration demanding complete cancellation of ...

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் : சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு முடிவு : முதல்வர் பழனிசாமி அதிரடி

கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். போலீசாரால் உயிரிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.



''கணவருடன் சேர்ந்து யோகா செய்கிறேன்''- நடிகை சமந்தா



அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



நடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி வடபழனி காவல்நிலையத்தில் புகார்

நடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா. சந்திரலேகா படம் மூலம் விஜய் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவருக்கு நடந்த இரண்டு திருமணங்கள் தோல்வியை தழுவின. முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.



சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு; அதிகபட்மாக ராயபுரம் மண்டலத்தில் 7,455 பேர் பாதிப்பு; இதுவரை 776 பேர் பலி..!!

சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3 மாதங்கள் ஆன நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள்  திணறி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக,  ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,400ஐ தாண்டியுள்ளது.


கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.



உலகளவில் கொரோனாவுக்கு ஒரு கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி வரை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான்மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது.