South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Wednesday, June 24, 2020
கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்!!!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வியூகங்களை அமைத்து வீடு வீடாக சென்று பல்வேறு முயற்சிகள் எடுப்பது போன்று, தற்போது தமிழக அரசு வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட கபசுர குடிநீர் உள்ளிட்ட ப்ரோப்பைலக்டிக் மருந்துகள் அடங்கிய தொகுப்பையும் வீடு வீடாக சென்று வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது.
நாளை முதல் தமிழக மாவட்ட எல்லைகள் மூடல் - மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ - பாஸ் அவசியம்
நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்: முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
வில்சன் கொலை வழக்கு: 'சிம் கார்டு' வாங்கி கொடுத்த 12 பேர் மீது குற்றப்பத்திரிகை
சிறப்பு எஸ்.ஐ., வில்சனை கொலை செய்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு, போலி ஆவணங்கள் வாயிலாக, 'சிம் கார்டு'கள் வாங்கி கொடுத்த, 12 பேர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அக்டோபரில் உச்சம்...! சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா மருத்துவமனையாக மாறுகிறது...!!
அக்டோபரில் உச்சம் அடையும் கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 15,968 ஆக உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,968 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 465 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது அதிகபட்ச ஒருநாள் கொரோனா பாதிப்பாகும். கொரோனா தொற்றுநோய் 456,183 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7-days intense lockdown starts today in Madurai | door-to-door surveilla...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
Annamalai addressing villagers in Melur in Madurai | Annamalai Press Mee...
TN CM EPS and OPS in Siddha hospital chennai
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
1 crore seed balls for the Ramanathapuram National Academy School