Tuesday, July 7, 2020

காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும்



ராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச அதிரடி

கொரானோ ஊரடங்கு வந்து எல்லோரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இணையதளங்களில் படத்தை வெளியிட்டு மும்முரமாய் இருக்கிறார். அதிலும் அவை சாதாரணப் படங்கள் அல்ல ஆபாசப்படங்கள்.


தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை - முதல்வர் இன்று திறப்பு

சென்னை, கிண்டியில் உள்ள, தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டடம், இரண்டு வாரத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை, முதல்வர் இ.பி.எஸ்., இன்று(ஜூலை 7) துவக்கி வைக்க உள்ளார்.

இதில், மொத்தம், 750 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா தொற்று சிகிச்சைக்காக, 500 படுக்கை வசதியும்; தீவிர சிகிச்சை பிரிவுக்காக, 70 படுக்கைகளும் பயன்படுத்தப்பட உள்ளன. அத்துடன், 300 படுக்கைகளில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கென நவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள, இந்த மருத்துவமனையை, விரைவில், முதல்வர் இ.பி.எஸ்., இன்று துவக்கி வைக்க உள்ளார்.