Friday, December 5, 2025
Tiruparankundram Deepathoon row: contempt petition against the violation...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Madras HC permits the devotees to Light Karthigai Deepam at Deepathoon; ...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 05, 2025, கார்த்திகை 19, விசுவாவசு வருடம் 07-00: AM
மதுரை,
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் மதுரை ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை கோரிய மனுவை 2 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, கோயில் செயல் அலுவலர், காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆஜராக வேண்டும் எனவும், நேரில் இல்லாவிட்டாலும் காணொலி வாயிலாக உடனடியாக ஆஜராக வேண்டும் எனவும், காவல் ஆணையர் சீருடையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அரசுத் தரப்பில் "அதிகாரிகள் 5 நிமிடங்களில் ஆஜராக வேண்டும் என்றால் எப்படி?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நீதிபதி, "5.30 மணிக்குள் ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் காணொலி வாயிலாக ஆஜராகாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்றார். பின்னர் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் காணொலி வாயிலாக ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா, 144 தடை உத்தரவைப் பிறப்பிக்க ஆட்சியருக்கு எப்போது பரிந்துரைக்கப்பட்டது என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். அதற்கு காவல் ஆணையர் பதில் அளித்தார்.
பின்னர் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது
தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்காக மனுதாரர், அவரது வழக்கறிஞர்கள் ஆகியோர் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் மலைக்குச் செல்ல முயன்றபோது காவல் ஆணையர் தடுத்துள்ளார். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், மேலே செல்ல அனுமதிக்க இயலாது என்று கூறியுள்ளார்.
அதாவது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இயலாது என்று தெரிவித்துளளார். இதனால் தீபம் ஏற்ற இயலவில்லை. காவல் ஆணையர் போதுமான பாதுகாப்பு வழங்கியிருந்தால், பிரச்சினை பெரிதாகியிருக்காது. ஆணையர் நீதிமன்றத்தைவிட, ஆட்சியர் பெரியவர் என்று எண்ணியுள்ளார். ஆட்சியர் பிறப்பித்த உத்தரவால், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த இயலவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இன்று (டிசம்பர் 4) சர்வாலய தீபத்திருநாள் என்பதால் இன்றும் கார்த்திகை தீபம் ஏற்றலாம். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற காவல் ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரர் தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை (இன்று) காலை 10.30 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கடும் விளைவுகள் ஏற்படும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவது அரசின் கடமை - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 05, 2025, கார்த்திகை 19, விசுவாவசு வருடம் 06-40: AM
மதுரை,
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதியின் அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற உத்தரவை செயல்படுத்தாததால், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர்கள் மற்றும் 10 பேர் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுமாறும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டார். ஆனால், தீபம் ஏற்ற போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில், தனி நீதிபதியின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர்தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மற்றும் மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசுத் தரப்பில், "நீதிமன்ற பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள சிஐஎஸ்எப் வீரர்களை மனுதாரர்கள் பாதுகாப்புக்கு அனுப்பியது சட்டவிரோதமாகும். காலஅவகாசம் இருந்த போதிலும், இந்த மனுவை தனிநீதிபதி அவசரமாக ஏற்றுக் கொண்டுள்ளார். நீதிபதியின் உத்தரவால் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல, தர்கா தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது
நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவது அரசு இயந்திரத்தின், அரசியலமைப்புக் கடமையாகும். ஆனால், தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தவில்லை. மாற்று நிவாரணத்தைக்கூட பின்பற்றவில்லை. மனுதாரர் மற்றும் 10 பேர் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்என்று உத்தரவு பிறப்பித்த நிலையில், திருப்பரங்குன்றத்தில்144 தடை உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்? நீதிமன்ற உத்தரவை நிர்வாக உத்தரவு கட்டுப்படுத்துமா?
வழக்கின் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, மேல்முறையீட்டாளர்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்று தெரிகிறது. இது நன்கு வடிவமைக்கப்பட்ட செயலாகும். தனி நீதிபதி உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே பின்பற்றவில்லையா என்பதை சோதிக்க வேண்டும். மேல்முறையீட்டில் அதிகாரிகளின் நடத்தை குறித்து அவசரமாக முடிவுக்கு வர முடியாது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் முடிவு செய்திருப்பதை கண்டறிந்த தனி நீதிபதி, தீர்ப்பை நிறைவேற்ற சிஐஎஸ்எப் உதவியை கோரியுள்ளார். மாநில காவல் துறையால் அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற, மத்திய படையின் உதவியைப் பெறுவதில் சட்டவிரோதம் இல்லை.
மேலும், நீதிமன்றத்தின் முதல் உத்தரவில், நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றும் பொறுப்பு கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்தப் பொறுப்பை நிறைவேற்றாததால், மனுதாரர்களிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முன்கூட்டியே தடுக்கும் மறைமுக நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Section 144 imposed across Thiruparankundram - Arguments, pushing, tensi...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்
பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27, விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...
-
பதிவு: திங்கள்கிழமை, அக்டோபர் 27, 2025, ஐப்பசி 10, விசுவாவசு வருடம் 04-15: AM சென்னை, 'வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நிலை கொண்டி...