Monday, July 20, 2020

வைகோ கண்டனம் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘‘விபச்சார விடுதி’’ என்று பதிவிடுவதா?

பதிவு: ஜூலை 20,  2020 09:10 PM

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘‘விபச்சார விடுதி’’ என்று பதிவிட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 95 ஆண்டுகளாக நாட்டின் விடுதலைக்கும், பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அரசமைப்புச் சட்ட வழியில் நின்று செயல்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் கட்சி ஆகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை மாநகர், தியாகராயர் நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அமைச்சருக்கே தெரியாமல் வெளியிட்டது குறித்து விசாரணை

பதிவு: ஜூலை 20,  2020 08:10 PM

சென்னை,

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அமைச்சருக்கே தெரியாமல் வெளியிட்டது குறித்து, பள்ளி கல்வி துறையில் விசாரணை துவங்கியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரானது.ஜூலை, 6ல், தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முடிவு செய்திருந்தார். இதற்காக, முதல்வர் அலுவலகத்தில் ஒப்புதல் கேட்டு, கோப்பும் அனுப்பப்பட்டது.ஆனால், மார்ச், 24ல் விடுபட்ட தேர்வை, மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்த, 780 மாணவர்களுக்கு தேர்வை நடத்திய பின், தேர்வு முடிவை வெளியிடலாம் என, தள்ளி வைக்கப்பட்டது. இந்த மறுதேர்வு, வரும், 27ல், நடக்க உள்ளது.


தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 20,  2020 07:30 PM

சென்னை,

தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



நந்திதா ஸ்வேதாவின் புதிய புகைப்படங்கள்


2 மணிநேரத்தில்12 கிமீ தூரம் ஓடி கொலையாளியை கண்டுபிடித்த மோப்ப நாய்

பதிவு: ஜூலை 20,  2020 02:45 PM

பெங்களூரு,

கர்நாடகாவில் துப்பறியும் நாயான துங்கா, 2 மணி நேரத்தில் கொலை நடந்த இடத்தில் இருந்து 12 கி.மீ தூரம் மோப்பம் பிடித்து சென்று குற்றவாளியை தேடிப்பிடித்துள்ளது. துங்காவின் செயலை மூத்த அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

கடந்த ஜூலை 10ம் தேதி, கர்நாடகா மாநிலம் டேவனகேரே அருகே உள்ள காஷிப்பூர் தண்டா பகுதியில் வசிக்கும் சேத்தன் மற்றும் சந்திர நாயக் உள்ளிட்ட நண்பர்கள், தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை திருடிச் சென்றனர்.