Saturday, June 20, 2020

தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான காலவரையறையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து பிரதமர் மோடி இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கான ஒரு மாத்திரை விலை ரூ.103



சீன ராணுவம் இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்றால், எதற்காக மோதல் நடைபெற்றது? - ப. சிதம்பரம் கேள்வி



இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை