Sunday, June 21, 2020

ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்

இன்று என் தம்பியின்  பிறந்தநாள்  ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான  பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது.  அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம்  நாங்கள் பல நாட்கள்  காத்திருந்து  தற்போது தான்  ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்ஷன்  இந்த படத்தை  தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.



இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,413 பேருக்கு கொரோனா தொற்று


6வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்கான நாள்.

6வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.



Saturday, June 20, 2020

தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான காலவரையறையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து பிரதமர் மோடி இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கான ஒரு மாத்திரை விலை ரூ.103