Thursday, June 25, 2020

நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை

கொரோனா பாதிப்பால் நேர்ந்த சோகம்; புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை...பெரும் அதிர்ச்சியில் நெல்லை மக்கள்..!!

நெல்லையில் அல்வாவுக்கு புகழ்பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வாதான், இருட்டுக்கடை அல்வாவிற்கு தனி மவுசு உண்டு என்றே சொல்லலாம். நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா என்பது பல நூற்றாண்டுகள் பழமையானது.


ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள்: கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலி செய்யும் நடவடிக்கை மு.க.ஸ்டாலின்

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள்: கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலி செய்யும் நடவடிக்கை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு காணொலக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.



ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்



விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்ல தடை - டிஜிபி திரிபாதி




அரை நிர்வாண உடம்பில் குழந்தைகள் ஓவியம் வரைவது போல் வீடியோ வெளியிட்ட பாத்திமா ரெஹானா

அரை நிர்வாண உடம்பில் குழந்தைகள் ஓவியம் வரைவது போல் வீடியோ வெளியிட்ட சர்ச்சை புகழ் பாத்திமா ரெஹானா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பையடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர். பாத்திமா ரெஹானா என்ற பெண் செயற்பாட்டாளரும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார்.


முதன்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேர் கொரோனாவால் பாதிப்பு

முதன்முறையாக ஒரே நாளில் 16,922 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.73 லட்சத்தை தாண்டியது; 14,894 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,105-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 16,922 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 418 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 14,894 பேர் உயிரிழந்த நிலையில் 2,71,697 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Wednesday, June 24, 2020

கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வியூகங்களை அமைத்து வீடு வீடாக சென்று பல்வேறு முயற்சிகள் எடுப்பது போன்று, தற்போது தமிழக அரசு வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட கபசுர குடிநீர் உள்ளிட்ட ப்ரோப்பைலக்டிக் மருந்துகள் அடங்கிய தொகுப்பையும் வீடு வீடாக சென்று வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார்.