South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Sunday, June 28, 2020
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு; அதிகபட்மாக ராயபுரம் மண்டலத்தில் 7,455 பேர் பாதிப்பு; இதுவரை 776 பேர் பலி..!!
சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3 மாதங்கள் ஆன நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,400ஐ தாண்டியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி இருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் புதிய பகுதிகளுக்கும் கொரோனா வேகமாக பரவி வருவதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் ராகுல் காந்தி எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
உலகளவில் கொரோனாவுக்கு ஒரு கோடி பேர் பாதிப்பு
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி வரை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான்மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது.
Saturday, June 27, 2020
கொரோனா பிடியில் சென்னை.. அச்சத்தில் உறைந்த சென்னை வாசிகள்...
கொரோனா பிடியில் சென்னை...கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்து.: அச்சத்தில் உறைந்த சென்னை வாசிகள்
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவின் வுகான் நகரை சென்னை மாநகரம் மிஞ்சிவிடுமோ என்ற அச்சத்தில் சென்னை வாசிகள் தற்போது உள்ளனர். தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 78,335-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்ற பீட்டர் பால்
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா. சந்திரலேகா படம் மூலம் விஜய் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவருக்கு நடந்த இரண்டு திருமணங்கள் தோல்வியை தழுவின. முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 3,713 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,025 ஆக இன்று உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிர்ச்சியளிக்கும் வகையில், நேற்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்திருந்தது.
Minister Selur Raju inspected Madurai Madakkulam Dank tarn without Socia...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
SP V Varun Kumar demands NTK chief Seeman’s apology in court over defam...
TN CM EPS and OPS in Siddha hospital chennai
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
1 crore seed balls for the Ramanathapuram National Academy School