Monday, July 6, 2020

Theni District Advocates Paid Tribute In Indian Soldiers | India-China c...

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.


சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



இந்தியாவில் ஒரே நாளில் 24,248 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



Sunday, July 5, 2020

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்...! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா?.. மு.க. ஸ்டாலின் கேள்வி



தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகி வருகிறது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டிய நிலையில், கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது. நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை 4,280 ஆக அதிகரித்தது. இதனால் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்திருந்தது.


ரவுடி விகாஷ் துபேயை வேட்டையாட 25 தனிப்படைகள்

உத்தர பிரதேசத்தில், எட்டு போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கூட்டாளி ஒருவனை போலீசார் கைது செய்தனர்.