Thursday, July 9, 2020

குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள்- வெளிநாட்டு வாழ் சீனர்களுக்கு எச்சரிக்கை

மொத்த குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள் வெளிநாட்டி வசிக்கும் சீனர்களை குறிவைத்து சீனா நரி வேட்டை என்ற பெயரில் ரகசிய திட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டபர் ரே, இந்த விவகாரம் தொடர்பில் தமது பார்வைக்கு வந்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சீனா அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் உளவு செயல்பாடுகளில் எஞ்சிய நாடுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தமிழகத்தில் இன்று (ஜூலை 09) புதிதாக 4,231 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று (ஜூலை 09) புதிதாக 4,231 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆகவும், பலி எண்ணிக்கை 1,765 ஆகவும் அதிகரித்துள்ளது.



Wednesday, July 8, 2020

தன்னைப் போன்று பிறர் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார் – ராகுல் காந்தி

தன்னை போன்று பிறர் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்திய-சீன எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதல் மற்றும் அதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்டைகள் ஆகியவற்றில் மத்திய அரசு சிறப்பாக செயல்படவில்லை என குற்றம் சாட்டி வருகிறார்.


தமிழகத்தில் இன்று (ஜூலை 08) 3,756 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப்போகின்றன: ராகுல் குற்றச்சாட்டு

இந்தியாவின் மோசமான பொருளாதார மேலாண்மையால், லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போவதாக காங்., எம்பி, ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரசை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளதாக காங்., எம்பி ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். அந்தவகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிகாகோ பல்கலை நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.



Featured post

Minister P Moorthy vows to block Tungsten Mining Project