பெங்களூரு,
கர்நாடகாவில் துப்பறியும் நாயான துங்கா, 2 மணி நேரத்தில் கொலை நடந்த இடத்தில் இருந்து 12 கி.மீ தூரம் மோப்பம் பிடித்து சென்று குற்றவாளியை தேடிப்பிடித்துள்ளது. துங்காவின் செயலை மூத்த அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
கடந்த ஜூலை 10ம் தேதி, கர்நாடகா மாநிலம் டேவனகேரே அருகே உள்ள காஷிப்பூர் தண்டா பகுதியில் வசிக்கும் சேத்தன் மற்றும் சந்திர நாயக் உள்ளிட்ட நண்பர்கள், தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை திருடிச் சென்றனர்.