Tuesday, July 21, 2020

தமிழகத்தில் இன்று மேலும் 4,965 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 21,  2020 06:45 PM

சென்னை,

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,80,643 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,18,043-லிருந்து 11,55,191-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,497-லிருந்து 28,084 -ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,00,087-லிருந்து 7,24,577 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 587 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் மட்டும் கொரோனாவில் இருந்து 24,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மாநிலம் முழுவதும் தி.மு.க., சார்பில் போராட்டம்

பதிவு: ஜூலை 21,  2020 11:25 AM

சென்னை,

தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மாநிலம் முழுவதும் தி.மு.க., சார்பில் போராட்டம் நடந்தது. மின்கட்டண குழப்பங்களை நீக்கவும், கட்டண சலுகை வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது.

வீடுகளின் முன்பு கறுப்புக்கொடி ஏந்தியும், கண்டன முழக்கங்களுடனும் போராட்டம் நடந்தது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா பாதிப்பு

பதிவு: ஜூலை 21,  2020 10:55 AM

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரொனா

பதிவு: ஜூலை 21,  2020 10:35 AM

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Monday, July 20, 2020

வைகோ கண்டனம் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘‘விபச்சார விடுதி’’ என்று பதிவிடுவதா?

பதிவு: ஜூலை 20,  2020 09:10 PM

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘‘விபச்சார விடுதி’’ என்று பதிவிட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 95 ஆண்டுகளாக நாட்டின் விடுதலைக்கும், பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அரசமைப்புச் சட்ட வழியில் நின்று செயல்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் கட்சி ஆகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை மாநகர், தியாகராயர் நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது.