பதிவு: ஜூலை 23, 2020 08:40 AM
அயோத்தி,
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 'விழாவில் பங்கேற்க, அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்' என, கோவிலை கட்டும், 'ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா'அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர், 9ல் அனுமதியளித்து உத்தரவிட்டது.
பதிவு: ஜூலை 21, 2020 06:45 PM
சென்னை,
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,80,643 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,18,043-லிருந்து 11,55,191-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,497-லிருந்து 28,084 -ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,00,087-லிருந்து 7,24,577 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 587 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் மட்டும் கொரோனாவில் இருந்து 24,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.