Wednesday, August 5, 2020

தமிழகத்தில் மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று

பதிவு: ஆகஸ்ட் 05,  2020 06:45 PM

சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது.



அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தொடங்கியது - பிரதமர் மோடி பங்கேற்பு

பதிவு: ஆகஸ்ட் 05,  2020 12:30 PM

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வருகிறது.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராம ஜென்ம பூமியில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை அடிக்கல் நாட்டுகிறார்.  கொரோனா அச்சுறுத்தலால் முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.


Monday, August 3, 2020

"வங்க கடல் முத்தமிடும் எங்கள் தங்க தமிழ் ஈழ நாடு" - பாடல் வெளியீடு

பதிவு: ஆகஸ்ட் 03,  2020 09:45 PM

சென்னை,

எதிர்கால சந்ததியினர் ஈழத்தின்.... கலை, பண்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஒரு உலகளாவிய படலாக, யாழ்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு, ('மீன் பாடும் தேன் நாடு') போன்றவற்றின் இதுவரை அறியாத வரலாறு... என நீள்கிறது... இப்பாடல்...

Add caption



Celebrating Thala Ajith's 28th year of Anniversary in Cinema Industry | ...

ரக்‌ஷா பந்தன் பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பதிவு: ஆகஸ்ட் 03,  2020 05:45 PM

புதுடெல்லி,

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.



புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம் - இயக்குநர் பாரதிராஜா தலைமை பொறுப்பு

பதிவு: ஆகஸ்ட் 03,  2020 03:20 PM

சென்னை,

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகி உள்ளது.

நடிகர் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.