Saturday, June 27, 2020

கொரோனா பிடியில் சென்னை.. அச்சத்தில் உறைந்த சென்னை வாசிகள்...

கொரோனா பிடியில் சென்னை...கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்து.: அச்சத்தில் உறைந்த சென்னை வாசிகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவின் வுகான் நகரை சென்னை மாநகரம் மிஞ்சிவிடுமோ என்ற அச்சத்தில் சென்னை வாசிகள் தற்போது உள்ளனர். தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 78,335-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.



விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்ற பீட்டர் பால்

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா. சந்திரலேகா படம் மூலம் விஜய் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவருக்கு நடந்த இரண்டு திருமணங்கள் தோல்வியை தழுவின. முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.




தமிழகத்தில் இன்று கொரோனாவால் 3,713 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,025 ஆக இன்று உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதிர்ச்சியளிக்கும் வகையில், நேற்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.


Minister Selur Raju inspected Madurai Madakkulam Dank tarn without Socia...

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு முதல் பத்திரிகையாளர் வேல்முருகன் உயிரிழப்பு




இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது: 15,685 பேர் பலி

நாட்டில், ஒரே நாளில், 18 ஆயிரத்து, 552 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது.