சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவின் வுகான் நகரை சென்னை மாநகரம் மிஞ்சிவிடுமோ என்ற அச்சத்தில் சென்னை வாசிகள் தற்போது உள்ளனர். தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 78,335-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Saturday, June 27, 2020
Subscribe to:
Posts (Atom)