Friday, July 10, 2020

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை

உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் ம.பி.,யில் பதுங்கியிருந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு, கான்பூருக்கு அழைத்து செல்லும் வகையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது. இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட எட்டு போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவானான். இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சிலரை கைது செய்தனர்.



Programme on giving extra Gratia to elders and widows | M. R. Vijayabhas...

"Corona will touch it's peak then only it will recede as per medical exp...

Thursday, July 9, 2020

குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள்- வெளிநாட்டு வாழ் சீனர்களுக்கு எச்சரிக்கை

மொத்த குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள் வெளிநாட்டி வசிக்கும் சீனர்களை குறிவைத்து சீனா நரி வேட்டை என்ற பெயரில் ரகசிய திட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டபர் ரே, இந்த விவகாரம் தொடர்பில் தமது பார்வைக்கு வந்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சீனா அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் உளவு செயல்பாடுகளில் எஞ்சிய நாடுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தமிழகத்தில் இன்று (ஜூலை 09) புதிதாக 4,231 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று (ஜூலை 09) புதிதாக 4,231 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆகவும், பலி எண்ணிக்கை 1,765 ஆகவும் அதிகரித்துள்ளது.



Wednesday, July 8, 2020

தன்னைப் போன்று பிறர் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார் – ராகுல் காந்தி

தன்னை போன்று பிறர் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்திய-சீன எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதல் மற்றும் அதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்டைகள் ஆகியவற்றில் மத்திய அரசு சிறப்பாக செயல்படவில்லை என குற்றம் சாட்டி வருகிறார்.


தமிழகத்தில் இன்று (ஜூலை 08) 3,756 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.