Tuesday, June 23, 2020

Sunday, June 21, 2020

நடிகர் அஸ்வின் குமார் டிரட்மில்லில் ஆடிய அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... : வாழ்க மகனே என பாராட்டிய கமல்

தமிழ் சினிமாவின் நடன நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். அவர் நடனத்திற்கு பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... பாடலுக்கு அவர் ஆடிய நடனத்தை பள்ளியில், கல்லூரியில் ஆடாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அந்த நடனம் புகழ் பெற்றது.

இப்போது அந்த நடனத்தை நடைபயிற்சி செய்யும் டிரட்மில்லில் நின்று கொண்டு ஆடியுள்ளார் நடிகர் அஸ்வின் குமார். இவர் துருவங்கள் பதினாரு படத்தில் அறிமுமானவர், தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். டிரட்மில்லில் நடனம் ஆடியிருப்பதோடு கமல்ஹாசன் போன்ற தோற்றத்திலும் இருப்பதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.



தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 64 பேருக்கும், கடலூரில் 102 பேருக்கும், திருவண்ணாமலையில் 77 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.