Friday, June 26, 2020

DMK MLA Moorthy Booked for Threatening BJP Functionary | Detailed Report...

Tamil Nadu Chief Minister Coimbatore District Visit | Athikadavu-Avinas...

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று - உயர்நீதிமன்றம் கருத்து

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவில்பட்டி சிறையிலேயே சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த கருத்தை முன்வைத்துள்ளது. மேலும் உயர்நீதிமன்ற விசாரணையை பொதுமக்கள் குறைத்து எடைபோட்டு விட வேண்டாம் என்றும் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் பரிந்துரை அளித்தனர்.

போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதாக, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



ஜூன் 30-க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? - வரும் 29-ம் தேதி முதல்வர் ஆலோசனை

ஜூன் 30-க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?; மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1-ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்பியது. காய்கறிக் கடைகள், மீன், இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.


Thursday, June 25, 2020

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-



நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை

கொரோனா பாதிப்பால் நேர்ந்த சோகம்; புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை...பெரும் அதிர்ச்சியில் நெல்லை மக்கள்..!!

நெல்லையில் அல்வாவுக்கு புகழ்பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வாதான், இருட்டுக்கடை அல்வாவிற்கு தனி மவுசு உண்டு என்றே சொல்லலாம். நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா என்பது பல நூற்றாண்டுகள் பழமையானது.