Sunday, July 5, 2020

ரவுடி விகாஷ் துபேயை வேட்டையாட 25 தனிப்படைகள்

உத்தர பிரதேசத்தில், எட்டு போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கூட்டாளி ஒருவனை போலீசார் கைது செய்தனர்.



வைரலாகும் ஸ்மிருதி இரானியின் இன்ஸ்டாகிராம் பதிவு

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் ஒரு வாழ்க்கை தத்துவத்தைப் பதிவிட்டுள்ளார்.


அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் தெரிந்த சந்திர கிரகணம்

இன்று (ஜூலை 05) தோன்றிய பெனும்பிரல் (புறநிழல் கிரகணம்) சந்திர கிரகணம், அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் மிகுதியாக தெரிந்தது.

2020ம் ஆண்டு, ஜனவரி 10 மற்றும் ஜூன் 5ம் தேதிகளில் சந்திர கிரகணத்தையும், ஜூன் 21ல் சூரிய கிரகணத்தையும் கண்டுள்ள இவ்வுலகம், இன்று மீண்டும் சந்திர கிரகணத்தை கண்டுள்ளது. அதிலும் கடந்த ஒரு மாத இடைவெளியில் 3 கிரகணம் நிகழ்ந்துள்ளது. இதனை விஞ்ஞானிகள், வானியல் ஜோதிட வல்லுனர்கள் அரிய நிகழ்வாக கருதுகின்றனர். இன்று நிகழ்ந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் (புறநிழல் கிரகணம்) என்றழைக்கப்படுகிறது. அதாவது கிரகணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழும்.



தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை

அனைத்து கடைகள், பெட்ரோல் பங்க் மூடல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு: வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் இன்று 07-05-2020 (ஞாயிறு) எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு  கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று பால், மருந்து கடைகள், பத்திரிகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. தேவையில்லாமல் வெளியே  சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளை முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை  கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.


Saturday, July 4, 2020

Tribute to Soldiers - Karur MP Jothimani Press Meet | Indian Army | Sicp

"We will definitely recover from Corona" - Minster R.B. Udhayakumar | Sicp

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 6,597 வாகனங்கள் பறிமுதல் - இதுவரை ரூ.16.96 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 6,597 வாகனங்கள் பறிமுதல்; இதுவரை ரூ.16.96 கோடி அபராதம் வசூல்..: தமிழக காவல்துறை தகவல்!

இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது  இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.