Saturday, December 13, 2025

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM

புதுடெல்லி,

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏதோ தவறு நடக்கிறது' என குறிப்பிட்டு, வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்த்து பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமிபுரத்தில், செப்டம்பர் 27ல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க, தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.மனு தாக்கல் இதற்கிடையே, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தனி நீதிபதி செந்தில் குமார், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.

இது, சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு மாறாக இருந்தது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு, ஒரு நபர் கமிஷனை ரத்து செய்து அக்டோபரில் உத்தரவிட்டது.

மேலும், கரூர் சம்பவத்தை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டதோடு, அதை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டது.

இந்நிலையில், ஒரு நபர் கமிஷன், சிறப்பு புலனாய்வு குழு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், ''ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். இது, சி.பி.ஐ., விசாரணையில் தலையிடாது.

''கூட்ட நெரிசல் சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க விதிமுறைகளை வகுக்கவும், பரிந்துரைகளை வழங்கவுமே ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது,'' என்றார்.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், எல்லாமே நியாயமாகவும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

நோட்டீஸ் பொதுக்கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எப்படி குற்றவியல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம்.

அங்கு ஏதோ தவறு நடக்கிறது. உயர் நீதிமன்றத்தில் நடப்பது எதுவும் சரியாக இல்லை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்க்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

திட்டவட்டம் 

அங்கு வழக்குகளை பட்டியலிடுவது, விசாரிப்பதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்வோம். அதன்பின், மற்ற விஷயங்களை பற்றி விசாரிக் கலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்தி வைத்தனர்.

அதே சமயம், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய இடைக்கால உத்தரவில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என, நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம் 

கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சி.பி.ஐ., -- எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக, விஜய்க்கு டில்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, December 12, 2025

‘ஜெயிலர் – 2’ படப்பிடிப்பில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

 

பதிவு:  வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12, 2025, கார்த்திகை 26,  விசுவாவசு வருடம் 04-10: PM

சென்னை, 

‘ஜெயிலர்–2’ படப்பிடிப்பு தளத்தில் இன்று தனது 75–வது பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.

வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் ரஜினிகாந்த். அவருடன் இயக்குநர் நெல்சன் உள்பட ஜெயிலர் 2 படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டினர்.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படையப்பா இன்று ரீ– ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. படையப்பா படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், கட்–அவுட்டுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சென்னை ரோகினி திரையரங்கில் படையப்பா ரீ–ரிலீஸை லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் பார்த்தனர். சென்னை காசி திரையரங்கில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பார்த்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த வீட்டின் முன் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்ததால், அவரை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின் ரசிகர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், “ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். படையப்பா படம் ரீ-ரிலிஸ் செய்யப்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களை பாதுகாப்பாக வீடு திரும்ப லதா ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

சென்னையில் சாலையில் படுத்து மறியல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: கைது குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிய போலீசார்

 

பதிவு:  வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12, 2025, கார்த்திகை 26,  விசுவாவசு வருடம் 04-00: PM

சென்னை, 

சென்னை மெரீனா கடற்கரை கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மண்டலங்களிலும் தனியார் மயமாக்கப்பட்டதை கைவிட்டு விட்டு பழைய முறைப்படியே குப்பை அள்ளும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதனால் அம்பத்தூர் மண்டலத்தில் குப்பை அள்ளும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வெளி மண்டலத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை வரவழைத்து பணிகள் செய்யப்பட்டன. இதற்கிடையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அண்ணா தி.மு.க., த.வெ.க. நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த போராட்டம் 13வது நாளை கடந்த நிலையில் சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் கட்டிடத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வரும் துப்புரவுத் தொழிலாளர்களை வெளியேற்றுமாறு சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் 100 நாட்களையும் கடந்து நீடித்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் அருகே ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் குவிந்தனர். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு குவிந்திருந்த போலீசார் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்த செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டமாக குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது பரபரப்பாக காணப்பட்டது. மேலும் போராட்டத்தால் காமராஜர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்

இதற்கிடையில், சென்னை தலைமையகம் முன்வு 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தப்படுத்த முயன்றனர். ஆனால் போரட்டக்காரர்கள் தரையில் படுத்துக் கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Thursday, December 11, 2025

திமுகவில் இணைந்தது ஏன்? - பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி

 

பதிவு: புதன்கிழமை,  டிசம்பர் 11, 2025, கார்த்திகை 25,  விசுவாவசு வருடம் 02-00: PM

சென்னை,

நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என்று பி.டி.செல்வகுமார் கூறினார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பி.டி.செல்வக்குமார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

அதன்பின்னர் பி.டி.செல்வக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விஜய் மக்கள் இயக்கத்துக்கு தூணாக செயல்பட்டேன்; விஜயின் கட்சிக்கு புதிதாக வந்தவர்களால் எங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவெகவில் விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை. திமுகவின் கட்டமைப்பு என்னை ஈர்த்ததால் அக்கட்சியில் சேர்ந்தேன்; நான் உருவாக்கிய கலப்பை மக்கள் இயக்கத்தை திமுகவில் இணைத்துவிட்டேன்.

நிலவு ஒருநாள் அமாவாசையாகும்... நட்சத்திரம் 15 நாட்களுக்குள் இல்லாமல் போகும்.. அதுபோல அவரும் ஒரு நாள்... எனக்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார். நிர்மல் குமார், ஆனந்த், ஆதவ் எல்லாம் எப்போது ரசிகர் மன்றத்தில் இருந்தார்கள்.

மக்களையும், ரசிகர்களையும் விஜய் சரியாக வழிநடத்த வேண்டும். மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்வாரா என தெரியவில்லை. ஆனால் எனக்கு மக்கள் பணி செய்யவேண்டும். என் உயிர் உள்ளவரை மக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவில் இணைந்த கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் விவரம்:-

கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் தோப்பூர் வி.அனிதா, மாவட்ட பொருளாளர் விஸ்வை கே.சந்திரன், கலப்பை மக்கள் இயக்க கௌரவ ஆலோசகர் விஜயன், மாநில துணைத் தலைவர் நந்தகுமார், மாநிலச் செயலாளர் எம்.ராஜ்குமார், மாநில இளைஞர் அணிச் யெலாளர் ஜே.ரவிமுருகன், மாநிலப் பொறுப்பாளர் நாகர்கோவில் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணித் த்லைவர் ஜி.சுபின்ஆனந்த், மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் வி.செல்வன்.

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஏசுதாசன், ஒன்றியச் செயலாளர் டி.ஜெகன், மாவட்ட ஐடி விங் பொறுப்பாளர் ஜி.செந்தில், மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் கௌதம், சமூக சேவகர் சொர்ணப்பன், திரைப்படத் தயாரிப்பாளர் - இயக்குநர் விஷ்ணுஹாசன், நடிகர் விஜயபாலாஜி, மகளிர் அணி பொறுப்பாளர் லெட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

DMK 100 times more powerful than Amit Shah DMK will remain in power with...

Wednesday, December 10, 2025

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய அணி அபார வெற்றி

 

பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 10, 2025, கார்த்திகை 24,  விசுவாவசு வருடம் 06-00: AM

கட்டாக் ,

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் (5 பந்துகள்) களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், லுதோ சிபாம்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது 2-வது ஓவரில் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் (14 ரன்) சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் போல்டானார். தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் கைப்பற்றி கடும் நெருக்கடி கொடுத்தனர். பின்னர் வந்த டேவிட் மில்லர் (1 ரன்), டோனோவன் பெரீரா (5 ரன்கள்), மார்கோ ஜான்சன் (12 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அசத்தலாக பந்துவீசிய இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக், துபே மற்றும் அக்சர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Tuesday, December 9, 2025

“திமுகவை நம்பாதீர்கள் - அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்” - புதுச்சேரியில் விஜய் பேச்சு

 

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 09, 2025, கார்த்திகை 23,  விசுவாவசு வருடம் 01-00: PM 

 புதுச்சேரி,

விஜய் வருகை தந்த நிலையில் கூட்டம் இல்லாததால், பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பிரசார வாகனத்தில் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்கு பிறகு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழகம் போல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில், புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வாகனத்தில் நின்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க. இந்த ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி மாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று இருப்பார்கள். நாம் வேறு வேறு கிடையாது. நாம் ஒன்றுதான். எல்லோரும் சொந்தம்தான். நாம் பார்க்கும்போது பாச உணர்வு, அதுமட்டும் இருந்தால் போதும். உலகில் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் நம் உயிர்தான். பாரதியார் இருந்த மண். பாரதிதாசன் பிறந்த மண்.

1977-ல் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். 1974-ல் புதுச்சேரியில் அவரது ஆட்சி அமைந்தது. அவர்கள்தான் அலெட் செய்தனர். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க முடியுமா?.

புதுச்சேரி மக்கள் 30 ஆண்டுகளாக தாங்கி பிடிக்கிறீர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்.

அது எனது கடமையும்கூட.

புதுச்சேரி அரசாங்கம் தமிழகத்தில் உள்ள திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது. புதுச்சேரி முதல்வருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரப் போகின்ற தேர்தலில் அவர்கள் 100% கற்றுக் கொள்வார்கள். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

புதுவை அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எந்த விஷயத்திலும் கண்டு கொள்ளவில்லை என்பது மக்களுக்கே தெரியும். மாநில அரசு கோரிக்கை மட்டுமா அவர்கள் கண்டு கொள்ளவில்லை? இங்கு வளர்ச்சி ஏற்பட அவர்கள் துணை நிற்கவில்லை என கேள்விப்படுகிறோம். புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பலமுறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள், பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அவர்கள் எதையுமே செய்யவில்லை. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது. இது குறித்து யார் பேசினாலும் அவர்களின் காதுகளில் விழவே இல்லை. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடாது. இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான். ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்.

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டில் ஒரு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் 200 நாட்களாகியும் இன்னும் அந்த பதவிக்கு யாரும் அமர்த்தப்படவில்லை. இந்த செயல் சிறுபான்மை மக்களை அவமதிப்பதாக அம்மக்களே சொல்கிறார்கள்.

புதுச்சேரியின் முக்கிய அங்கமாக உள்ள காரைக்கால், ஏனாம் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என அப்பகுதி மக்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். காரைக்கால் பகுதிகள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி கிடையாது. இவை அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி-கடலூர் மார்க்கத்தில் ரயில் திட்டத்தை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் புதுச்சேரி, மத்திய நிதி குழுவில் இடம் பெறவில்லை, அதனால் மாநிலங்களுக்கான நிதி பகிர்கள் அடிப்படையிலும், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிர்வு அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு தோராயமாக மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. இந்த நிதியும் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய தொகை உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்கே சென்று விடுகிறது.

மற்ற தேவைகளுக்கு வெளி சந்தையில் கடன் பத்திரங்களை கடன் வாங்குகிறது புதுச்சேரி. இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும். புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாத காரணத்தினால் வெளியே கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. புதுச்சேரியின் கடனை குறைத்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது, தொழில் வளர்ச்சியும் தேவை. புதுச்சேரியை தென்னிந்தியாவின் முன்னணி இண்டஸ்ட்ரியல் ஹப்பாக மாற்ற எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

மீன் பிடிக்க செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்கிறது. அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது.

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் குரல் கொடுப்பான். வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்... வெற்றி நிச்சயம் ”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Monday, December 8, 2025

புதுச்சேரியில் விஜய் – மக்கள் சந்திப்பு - 5000 பேருக்கு மட்டுமே அனுமதி

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 06-10: PM

சென்னை,

பிளக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள் வைக்கக்கூடாது - புதுச்சேரியில் விஜய் – மக்கள் சந்திப்பு - 5000 பேருக்கு மட்டுமே அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் புஸ்சி ஆனந்த்

புதுச்சேரியில் நாளை (9–ந் தேதி) நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. ‘தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைதி இல்லை, ஃபிக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள் வைக்க கூடாது என்று கண்டிப்புடன் தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளது.

தலைவரின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்து கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நாளை (9–ந்தேதி செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ‘புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி' நடைபெற உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நம் வெற்றித் தலைவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவரின் இந்தப் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கட்சித் தலைவரின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

கர்ப்பிணிகள், முதியவர்கள்: கண்டிப்பாய் அனுமதி இல்லை

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் தலைவரின் வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை.

வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள பாண்டி மெரினா பார்க்கிங், பழைய துறைமுகம் மற்றும் இந்திராகாந்தி ஸ்டேடியம் பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

கண்ணியத்துடன் நடக்க...

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

எளிதில் அடையாளம் காணும் வகையில் கட்சி நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை, இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

காம்பவுண்ட் சுவர்களில் ஏறக்கூடாது

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக ‘வந்தே மாதரம்’ ஊக்குவிக்கும் - மக்களவையில் 10 மணிநேர சிறப்பு விவாதத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 04-10: PM

புதுடெல்லி,

‘‘வரும் 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் ஊக்குவிக்கும்’’ என்று மக்களவையில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

‘‘வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் பெருமிதத்தோடு கூறினார்.

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் விதத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை இயற்றினார். 1870களில் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு ஜாது நாத் பட்டாச்சார்யா இசை அமைத்தார். இது 1905ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக ஆனதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி தேசிய பாடலாக இது அங்கீகரிக்கப்பட்டது. இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கடந்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, வந்தே மாதரம் பற்றிய சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு பேசினார்.

இந்த நிலையில் வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் வந்தே மாதரம் குறித்து இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் 10 மணி நேர சிறப்பு விவாதத்தை இன்று பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி தொடக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

‘‘வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பது அனைவருக்கும் பெருமை. 150 ஆண்டுகளுக்கு முன்பு வந்தே மாதரம் என்று கூறியவர்களை சிறையில் அடைத்தனர். வருங்கால சந்ததிகளுக்கும் வந்தே மாதரம் வழிகாட்டியாக அமைந்துள்ளது.சர்தார் வல்லபாய் படேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது ஆண்டு விழாவையும் நாம் கொண்டாடுகிறோம். வந்தே மாதம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இன்று விவாதம் நடைபெறுகிறது. தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாகத் திகழ்ந்தது வந்தே மாதரம்.

ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் இல்லை...

2047ம் ஆண்டில், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் நம்மை ஊக்குவக்கும். வந்தே மாதரம் வெறும் அரசியல் முழக்கம் மட்டுமல்ல, அது தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக உயிரையும் துச்சமாக மதித்து தூய்மையாகப் போராடியவர்களின் உணர்வு.

இங்கு ஆளுங்கட்சிகளோ எதிர்க்கட்சிகளோ என்று இல்லை. வந்தே மாதரத்தின் பெருமையை கூட்டாகப் பாராட்டவும் ஏற்றுக்கொள்ளவும்தான் நாம் இங்கு இருக்கிறோம். இந்தப் பாடலால்தான் நாம் அனைவரும் இங்கே ஒன்றாக இருக்கிறோம்.

சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம்...

வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்டத்திற்கான முழக்கம் அல்ல. சுதந்திர தாய்க்கான பாடல். அனைத்து இந்தியர்களின் நம்பிக்கை.

வந்தே மாதரம் பல கட்டங்களை கடந்து வந்துள்ளது. வந்தே மாதரத்தை பிரிட்டன் மகாராணி வாழ்க என்று பாட வைக்க ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பலம் வாய்ந்த பிரிட்டனை எதிர்க்க 1875ம் ஆண்டு பங்கிம் சாட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை கொடுத்தார்.

வந்தே மாதம் சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தது. வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது, நாடு அடிமைச்சங்கிலியில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வந்தே மாதரத்தின் பெருமையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள இது ஒரு புனிதமான சந்தர்ப்பம். இந்த பாடல்தான், வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் நாட்டை ஒன்றிணைத்தது. மீண்டும் ஒன்றிணைந்து அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டிய நேரம் மீண்டும் வந்துவிட்டது. இந்தப் பாடல் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற நம்மை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் வேண்டும்.

2047க்குள் நமது நாட்டை தன்னிறைவு பெற்ற, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

ராஜ்ய சபாவில் நாளை அமித்ஷா துவக்குகிறார்

மாநிலங்களவையில் நாளை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ‘வந்தே மாதரம்’ விவாதத்தை தொடங்கி வைக்கிறார்.

100 ஆண்டு நிறைவின்போது அவசரநிலை

வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​நாடு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது, அதே நேரத்தில் அதன் 100 வது ஆண்டு விழாவின்போதோ, நாடு அவசரநிலையின் கீழ் சிக்கியிருந்தது. அந்த நேரத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. நாட்டின் விடுதலைக்காக வாழ்ந்தவர்களும் உயிரை இழந்தவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். நமது நாட்டின் வரலாற்றில், அவசரநிலை என்பது ஒரு இருண்டப் பக்கம். ஆனால் இன்றோ வந்தே மாதரத்தின் புகழை பறைசாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நடிகை பாலியல் பலாத்கார வழக்கு - மலையாள நடிகர் திலீப் விடுதலை

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 03-40: PM

திருவனந்தபுரம்,

ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்த கேரள நடிகை பலாத்கார வழக்கில் முன்னணி நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்டது.

மேலும், இதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்யவும் பல்சர் சுனில் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. காரில் கடத்தப்பட்ட அந்த நடிகை, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டார். அன்றைய தினமே அந்த நடிகை போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். இந்த சம்பவம் மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்தது.

நடிகர் திலீப் கைது

அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்தது. வழக்கில் திடீர் திருப்பமாக அந்த நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் தானாகவே முன்வந்து சரணடைந்து முக்கியக் குற்றவாளியானார். செல்போன் பதிவுகள் அடிப்படையில் நடந்த விசாரணையில் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் அவர் 8வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

1600 ஆவணங்கள், 280 சாட்சிகள்

இந்த வழக்கு தொடர்பாக 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்தார். எனினும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிபதி ஹனி வர்கீஸ்-ஐ வழக்கின் தனி நீதிபதியாக நியமித்து கேரள அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கைதான விஷ்ணு உள்ளிட்ட இருவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறி வாக்குமூலம் அளித்தனர்.

வழக்கின் விசாரணை 2018ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அதன் பிறகு கொரோனா காரணமாக இரு ஆண்டுகள் வழக்கு விசாரணை முடங்கியது. அதன் பிறகும் கூட பல்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை தாமதமாகிக் கொண்டே வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம் வர்கீஸ், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில் நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

8 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திலீப் உள்ளிட்ட 10 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் இறுதி தீர்ப்பை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று வெளியிட்டார். இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திலீப்பின் நண்பர் சரத் மீதும் போதிய ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டார். ஏ1 முதல் ஏ 6 வரையிலான குற்றவாளிகளான சுனில் மற்றும் மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீ, பிரதீப் ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் கோர்ட் அளித்த தீர்ப்பையடுத்து, நடிகர் திலீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை வைத்து எனது தொழில் வாழ்க்கையை அழிக்க சதி நடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி என்று கூறினார்.

Sellur K.Raju Says, "Hindus and Muslims live as brothers and sisters"

R.B.Udhaya Kumar Talk about Tiruparankundram Deepathoon Row | G.R.Swamin...

Tiruparankundram Deepathoon row:Puthiya Tamilagam Dr.K.Krishnasamy Press...

வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவு - மத்திய அரசு தகவல்

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 06-40: AM

புதுடெல்லி,

வக்பு சொத்து விவரங்களை உமீத் தளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் (டிசம்பர்  6) நிறைவடைந்து விட்டதாக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறுபான்மையினர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் வக்பு சொத்து விவரங்களைப் பதிவு செய்து நிர்வகிப்பதற்காக உமீத் என்ற தளம் 2025 ஜூன் 6 அன்று தொடங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களின்படி 6 மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.

நேற்றுடன் (டிசம்பர் 6, 2025) பதிவு செய்வதற்கான கெடு நிறைவடைந்தது.

காலக்கெடு நிறைவடையும் இறுதி நாட்களில் பதிவுகள் கணிசமாக அதிகரித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட மறுஆய்வுக் கூட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள், உயர் மட்ட தலையீடுகள் காரணமாக இதன் செயல்பாடு புதிய வேகத்துடன் இருந்தது. இதனால் கடைசி மணி நேரங்களில் பதிவேற்றம் அதிகரித்தது.

இந்த தளத்தில் 5,17,040 வக்ஃப் சொத்துக்கள் பதிவேற்றப்பட்டன. 2,16,905 சொத்துக்கள், அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டன. 2,13,941 சொத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சரிபார்ப்பின் போது 10,869 சொத்துக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த மிகப்பெரிய தேசிய அளவிலான முயற்சிக்காக, சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச வக்பு வாரியங்களுடனும் சிறுபான்மையினர் நலத் துறைகளுடனும் தொடர்ச்சியான பயிலரங்குகளையும் பயிற்சி அமர்வுகளையும் நடத்தியது.

நாடு தழுவிய அளவில் 7 மண்டலக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பதிவேற்றங்களின் போது எழும் சிக்கல்களைத் தொழில்நுட்ப ரீதியாக விரைவாகத் தீர்க்க, அமைச்சக அலுவலகத்தில் ஒரு பிரத்யேக உதவி மையம் அமைக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடல் விவாதம் - மக்களவையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 06-30: AM

புதுடெல்லி,

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதத்தை பிரதமர் மோடி மக்களவையில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் விதத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை இயற்றினார். 1870-களில் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு ஜாது நாத் பட்டாச்சார்யா இசை அமைத்தார்.

இது 1905-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக ஆனதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி தேசிய பாடலாக இது அங்கீகரிக்கப்பட்டது.

இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கடந்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, வந்தே மாதரம் பற்றிய சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு பேசினார். அவரது உரையில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு இருந்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது.

"தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம்" என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்டு இருக்கும் இந்த விவாதத்தை பிரதமர் மோடி இன்று மக்களவையில் தொடங்கி வைக்கிறார்.

பிரதமரை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தில் உரையாற்றுகிறார். அதன்பிறகு பிற கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். மக்களவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுபோல இந்த விவாதம் மாநிலங்களவையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா இதனை தொடங்கி வைக்கிறார். அங்கு சுகாதாரத்துறை மந்திரியும், அவை முன்னவருமான ஜே.பி.நட்டா 2- வது பேச்சாளராக பங்கேற்கிறார்.

இந்த விவாதத்தில் வந்தே மாதரம் பாடல் பற்றி இதுவரை அறிந்திராத பல விஷயங்கள் முன்வைக்கப்படும் என்றும், இளைஞர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு முக்கிய தகவல்களை ஆளுங்கட்சியினர் தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இந்த பாடலின் சில வரிகளை 1937-ம் ஆண்டு நீக்கி காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்துக்கு வித்திட்டதாக கூறியிருந்தார். இது அப்போது எதிர்க்கட்சியினரிடம் கடும் விமர்சனங்களை பெற்றது.

இந்தநிலையில் 2 அவைகளிலும் அது குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது. இதனால் அவையில் அனல் பறக்கும். இந்த விவாதத்துக்கான காலம் 10 மணி நேரம் என ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இந்த விவாதத்தை தொடர்ந்து, நாளை தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அடங்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இந்த விவாதம் நாளையும், நாளை, மறுநாளும் நடைபெறும். இதுபோல மாநிலங்களவையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் 10 மற்றும் 11 -ந் தேதிகளில் நடக்கிறது.

இந்த 2 விவாதங்களும் ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே மிகப்பெரிய கருத்துப்போராக இருக்கும் என்பதால் அவைகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, December 7, 2025

மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு - ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு இன்று ஒப்பந்தம்

 


 
 
பதிவு: ஞாயிறுக்கிழமை,  டிசம்பர் 07, 2025, கார்த்திகை 21,  விசுவாவசு வருடம் 06-30: AM


சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (அதாவது இன்று) மாமதுரை திருநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனையொட்டி, மதுரை மாநகர் மாபெரும் அளவில் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளர்கிறது' எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றின் வாயிலாக ரூ.36,660.35 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளில் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது. அத்துடன், மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021-ல் ஆட்சிப்பொறுப்பேற்றபின் மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18,795 கோடியில், 18 ஆயிரத்து 881 வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளார். மேலும், ரூ.8,668 கோடியில் 96 லட்சத்து 55 ஆயிரத்து 916 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றை தொடர்ந்து, நாளை நடைபெறும் விழாவில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் ரூ.3 ஆயிரத்து 65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.150.28 கோடி செலவில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார். திராவிட மாடல் அரசின் சார்பில், 2021-க்கு பின் மதுரை மாவட்டத்திற்கு அனைத்து வகையிலும் பெருமை சேர்த்து வருகிறார்.

இவைகளை எல்லாம் நினைவில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளபடி, இன்று மதுரைக்கு தேவைப்படுவது வளர்ச்சி மட்டும்தான் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 6, 2025

இலங்கை மக்களுக்கு 950 டன் நிவாரண பொருட்கள் - மு.க.ஸ்டாலின் இன்று அனுப்பி வைக்கிறார்

 

பதிவு: சனிக்கிழமை,  டிசம்பர் 06, 2025, கார்த்திகை 20,  விசுவாவசு வருடம் 07-00: AM

சென்னை,

இலங்கையில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 700-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகி உள்ளனர்.

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா' புயல் இலங்கையை புரட்டி போட்டது. வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் அந்நாட்டில் உள்ள பதுளை கண்டு, நுவரெல்லா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. புயலின் கோரத்தாண்டவத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 700-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகி உள்ளனர்.

‘டிட்வா' புயல் ஏற்படுத்திய பேரழிவால் 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சிக்கி தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமான படை மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்த புயல் பாதிப்பால் இலங்கையில் வசிக்கும் நம் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களும் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

புயலால் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தார்.

அப்போது அவர், இலங்கை மக்கள் இந்த துயரில் இருந்து மீண்டு வரும் வகையில், தமிழக அரசு துணைநிற்கும் என்றும், துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை வழங்கிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம் என்றும், அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம் என்றும் கூறியிருந்தார்.

அந்தவகையில் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் நிவாரண பொருட்கள் இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட உள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று மதியம் 12 மணியளவில் நிவாரண பொருட்களை சுமந்து செல்லும் கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.

சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரண பொருட்களில் 10 ஆயிரம் போர்வை, 10 ஆயிரம் துண்டு, 5 ஆயிரம் வேஷ்டி, 5 ஆயிரம் சேலை, 1,000 தார்பாலீன் ஆகியவையும், 650 டன் பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து 300 டன் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அனுப்பப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 டன் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

Friday, December 5, 2025

Tiruparankundram Deepathoon row: contempt petition against the violation...

Madras HC permits the devotees to Light Karthigai Deepam at Deepathoon; ...

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  டிசம்பர் 05, 2025, கார்த்திகை 19,  விசுவாவசு வருடம் 07-00: AM

மதுரை,


திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் மதுரை ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் மீதான நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை கோரிய மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்த நிலை​யில், நீதி​மன்ற அவம​திப்பு மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் நேற்று மாலை விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி, கோயில் செயல் அலு​வலர், காவல் ஆணை​யர், மாவட்ட ஆட்​சி​யர் ஆகியோர் ஆஜராக வேண்​டும் எனவும், நேரில் இல்​லா​விட்​டாலும் காணொலி வாயி​லாக உடனடி​யாக ஆஜராக வேண்​டும் எனவும், காவல் ஆணை​யர் சீருடை​யில் இல்​லா​விட்​டாலும் பரவா​யில்​லை, கண்​டிப்​பாக ஆஜராக வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டார்.

அரசுத் தரப்​பில் "அதி​காரி​கள் 5 நிமிடங்​களில் ஆஜராக வேண்​டும் என்​றால் எப்​படி?" என்று கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு நீதிப​தி, "5.30 மணிக்​குள் ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் காணொலி வாயி​லாக ஆஜராகா​விட்​டால் கடும் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்" என்​றார். பின்​னர் காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதன் காணொலி வாயி​லாக ஆஜரா​னார்.

அவரிடம் நீதிப​தி, நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த நடவடிக்கை எடுத்​தீர்​களா, 144 தடை உத்​தர​வைப் பிறப்​பிக்க ஆட்​சி​யருக்கு எப்​போது பரிந்​துரைக்​கப்​பட்​டது என்​றெல்​லாம் கேள்வி எழுப்​பி​னார். அதற்கு காவல் ஆணை​யர் பதில் அளித்​தார்.

பின்​னர் நீதிபதி தனது உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

தீபத் தூணில் தீபம் ஏற்​று​வதற்​காக மனு​தா​ரர், அவரது வழக்​கறிஞர்​கள் ஆகியோர் சிஐஎஸ்​எப் பாது​காப்​புடன் மலைக்​குச் செல்ல முயன்​ற​போது காவல் ஆணை​யர் தடுத்​துள்​ளார். 144 தடை உத்​தரவு அமலில் இருப்​ப​தால், மேலே செல்ல அனு​ம​திக்க இயலாது என்று கூறி​யுள்​ளார்.

அதாவது, நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற இயலாது என்று தெரி​வித்​துளளார். இதனால் தீபம் ஏற்ற இயல​வில்​லை. காவல் ஆணை​யர் போது​மான பாது​காப்பு வழங்​கி​யிருந்​தால், பிரச்​சினை பெரி​தாகி​யிருக்​காது. ஆணை​யர் நீதி​மன்​றத்​தை​விட, ஆட்​சி​யர் பெரிய​வர் என்று எண்​ணி​யுள்​ளார். ஆட்​சி​யர் பிறப்​பித்த உத்​தர​வால், நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த இயல​வில்லை என்று விளக்​கம் அளித்​துள்​ளார். மாவட்ட ஆட்​சி​யர் பிறப்​பித்த 144 தடை உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது.

இன்று (டிசம்பர் 4) சர்​வாலய தீபத்திரு​நாள் என்​ப​தால் இன்​றும் கார்த்​திகை தீபம் ஏற்​றலாம். நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற காவல் ஆணை​யர் முழு பாது​காப்பு வழங்க வேண்​டும். மனு​தா​ரர் தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக நாளை (இன்று) காலை 10.30 மணிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த உத்​தரவை மீறி​னால் கடும் விளைவு​கள் ஏற்​படும்​.

இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளார்​.

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவது அரசின் கடமை - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  டிசம்பர் 05, 2025, கார்த்திகை 19,  விசுவாவசு வருடம் 06-40: AM

மதுரை,

திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கில் தனி நீதிப​தி​யின் அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக மதுரை ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்​து, நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்த வேண்​டியது அரசின் கடமை என்று உத்​தர​விட்​டது.

திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்​டுமென்ற உத்​தரவை செயல்​படுத்​தாத​தால், மாவட்ட ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், மனு​தா​ரர்​கள் மற்​றும் 10 பேர் சிஐஎஸ்​எப் வீரர்​கள் பாது​காப்​புடன் தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​று​மாறும், நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றியது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறும் உத்​தர​விட்​டார். ஆனால், தீபம் ஏற்ற போலீ​ஸார் அனு​மதி மறுத்​தனர்.

இந்​நிலை​யில், தனி நீதிப​தி​யின் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை விதிக்​கக்கோரி ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர்தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு மற்​றும் மனு​தா​ரர்​கள் தரப்​பில் பல்​வேறு வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

அரசுத் தரப்​பில், "நீ​தி​மன்ற பாது​காப்​புப் பணிக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள சிஐஎஸ்​எப் வீரர்​களை மனு​தா​ரர்​கள் பாது​காப்​புக்கு அனுப்​பியது சட்​ட​விரோத​மாகும். காலஅவகாசம் இருந்த போதி​லும், இந்த மனுவை தனிநீதிபதி அவசர​மாக ஏற்​றுக் கொண்​டுள்​ளார். நீதிப​தி​யின் உத்​தர​வால் கலவரம் ஏற்​படும் சூழல் உரு​வாகி, 144 தடை உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது" என்று தெரிவிக்​கப்​பட்​டது. இதே​போல, தர்கா தரப்​பிலும் வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்​து​வது அரசு இயந்​திரத்​தின், அரசி​யலமைப்​புக் கடமை​யாகும். ஆனால், தனி நீதிப​தி​யின் உத்​தரவை அமல்​படுத்​த​வில்​லை. மாற்று நிவாரணத்​தைக்​கூட பின்​பற்​ற​வில்லை. மனு​தா​ரர் மற்​றும் 10 பேர் தீபம் ஏற்ற அனு​ம​திக்க வேண்​டும்என்று உத்​தரவு பிறப்​பித்த நிலை​யில், திருப்​பரங்​குன்​றத்​தில்144 தடை உத்​தரவை எப்​படி பிறப்​பிக்க முடி​யும்? நீதி​மன்ற உத்​தரவை நிர்​வாக உத்​தரவு கட்​டுப்​படுத்​து​மா?

வழக்​கின் நிகழ்​வு​களைப் பார்க்​கும்​போது, மேல்​முறை​யீட்​டாளர்​கள் தங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்ற அச்​சத்​தில் நீதி​மன்​றத்தை நாடி​யுள்​ளனர் என்று தெரி​கிறது. இது நன்கு வடிவ​மைக்​கப்​பட்ட செய​லாகும். தனி நீதிபதி உத்​தரவை அதி​காரி​கள் வேண்​டுமென்றே பின்​பற்​ற​வில்​லையா என்​பதை சோதிக்க வேண்​டும். மேல்​முறை​யீட்​டில் அதி​காரி​களின் நடத்தை குறித்து அவசர​மாக முடிவுக்கு வர முடி​யாது.

நீதி​மன்ற உத்​தரவை செயல்​படுத்த வேண்​டாம் என்று அதி​காரி​கள் முடிவு செய்​திருப்​பதை கண்​டறிந்த தனி நீதிப​தி, தீர்ப்பை நிறைவேற்ற சிஐஎஸ்​எப் உதவியை கோரி​யுள்​ளார். மாநில காவல் துறை​யால் அரசி​யலமைப்பு ஆணையை நிறைவேற்ற முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ளது. தேவைப்​பட்​டால் நீதி​மன்ற தீர்ப்பை நிறைவேற்ற, மத்​திய படை​யின் உதவியைப் பெறு​வ​தில் சட்​ட​விரோத​ம் இல்​லை.

மேலும், நீதி​மன்​றத்​தின் முதல் உத்​தர​வில், நீதி​மன்​றத் தீர்ப்பை நிறைவேற்​றும் பொறுப்பு கோயில் செயல் அலு​வலரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் அந்​தப் பொறுப்பை நிறைவேற்​றாததால், மனு​தா​ரர்​களிடம் அந்​தப் பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த மனு நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கையை முன்​கூட்​டியே தடுக்​கும் மறை​முக நோக்​கத்​துடன் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது.

இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Section 144 imposed across Thiruparankundram - Arguments, pushing, tensi...

Thursday, December 4, 2025

திருப்பரங்குன்றம் முழுவதும் 144 தடை உத்தரவு - வாக்குவாதம், தள்ளுமுள்ளு, பதற்றம் - நடந்தது என்ன?

 

பதிவு: வியாழக்கிழமை,  டிசம்பர் 04, 2025, கார்த்திகை 18,  விசுவாவசு வருடம் 05-40: AM

மதுரை,

144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சிஐஎஸ்எப் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழலால் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், மத்திய தொழிலக பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் புதன்கிழமை மாலை உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மனுதாரரான ராமரவிக்குமார், சக மனுத்தாரர்கள், இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு வீரர்களுடன் புதன்கிழமை இரவு திருப்பங்குன்றம் சென்றனர். முருகன் கோயிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோயில் பாதை வழியாக மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை அங்கு போலீஸார் தடுப்பு வேலிகளை போட்டு மறைத்து அனுமதி மறுத்தனர்.

திருப்பரங்குன்றம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாலும், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதாலும் இதில் முடிவு வரும் வரையிலும் யாரையும் மலைக்கு போகக் கூடாது போலீஸார் அறிவுறுத்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இந்து அமைப்பினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்களும் தடுப்புகளை மீறி மலைக்கு மேல் செல்ல முயன்றனர்.


அவர்களை போலீஸார் தடுத்ததால் ஆத்திரத்தில் தடுப்புகளை தள்ளிவிட்டும், மதில் சுவர்களில் ஏறியும் மலை பாதைநோக்கி ஓட முயன்றனர். தடுப்பு வேலிகளும் இந்து அமைப்பினரால் தூக்கியதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. முருகன் கோயிலுக்கு புகுந்து சிலர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பதற்றமான சூழலால் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பதினாறு கால் மண்டபம் , கோயில், மலை பகுதி போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


நீதிபதி கூறியது என்ன?

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ராமரவிக்குமார் உட்பட 4 பேர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிச.1-ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவுபடி செயல்படாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, அவமதிப்பு மனுவை புதன்கிழமை மாலை மனுதாரர் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு

‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் குறைபாடுகளுடன் ஒரு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இது நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்கான தந்திரமாகும். செயல் அலுவலர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாட்டோம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதில் மனுதாரரின் அடிப்படை உரிமைகளும் அடங்கியுள்ளன. சட்டத்தின் ஆட்சி ஆபத்தில் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவை அரசு நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளது. யாரையும் தூக்கிலிட உத்தரவிடவில்லை. எந்த கட்டிடத்தையும் இடிக்க உத்தரவிடவில்லை. இந்த நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்பட்டால் எந்த மீளமுடியாத விளைவுகளும் ஏற்படாது.

மறுபுறம் இந்த நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மிகவும் மோசமான சமிக்ஞையை அனுப்பும். இது எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தையில் ஈடுபட அதிகாரிகளை ஊக்குவிக்கும். அரசு எந்த மேல்முறையீடும் தாக்கல் செய்யவில்லை. சட்டப்பூர்வ அர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு என்று கூறக்கூடிய தர்கா தரப்பில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எந்த தடையும் கோரவில்லை.

அதிகாரிகளின் நடத்தையை மன்னிக்க முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்குப் பதிலாக, அந்தச் செயலை அந்த நோக்கத்துக்காக நியமிக்கப்பட்ட ஒருவரால் செய்ய உத்தரவிடுவதன் மூலம், அதன் உத்தரவுக்கு கீழ்ப்படிவதை உறுதி செய்வது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான். இந்த வழக்கில் அத்தகைய அணுகுமுறையை பின்பற்ற விரும்புகிறேன். மனுதாரர் 10 பேருடன் மலைக்குச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கிறேன்.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற மனுதாரருக்கும், அவருடன் செல்பவர்களுக்கும் பாதுகாப்புக்காக உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களை அனுப்ப சிஐஎஸ்எப் கமாண்டருக்கு உத்தரவிடுகிறேன்.

இந்த உத்தரவை நிறைவேற்றி வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Wednesday, December 3, 2025

சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை - தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு - அன்புமணி ராமதாஸ் தாக்கு

 

பதிவு: புதன்கிழமை,  டிசம்பர் 03, 2025, கார்த்திகை 17,  விசுவாவசு வருடம் 11-30: AM

சென்னை,

தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“நவீன இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தில் 65 சதவீதம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

5 ஜனாதிபதிகளை இந்தியாவுக்கு வழங்கிய சென்னை பல்கலைக்கழகத்தில் இப்போது பாடம் நடத்துவதற்கு கூட ஆளில்லாத நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அருண்குமார் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெற்றுள்ள தரவுகளை சுட்டிக்காட்டி ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 515 ஆசிரியர் பணியிடங்களில் 180, அதாவது 35% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள 335, அதாவது 65% பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

94 பேராசிரியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 63 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களிலும் கணிசமானவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளனர். 127 இணைப் பேராசிரியர்களில் வெறும் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 85% பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், 294 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 197 இடங்கள், அதாவது 67% பணியிடங்கள் இன்றைய நிலையில் காலியாக கிடக்கின்றன.

துறைவாரியாகப் பார்த்தால் சென்னை பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 71 துறைகளில் 16 துறைகளில் தலா ஒரே ஒரு ஆசிரியரும், 22 துறைகளில் தலா இரு ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர். எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதன் நிர்வாகப் பணிகளை கவனிக்க ஓர் ஆசிரியர் தேவை. அதன்படி பார்த்தால் 16 துறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள்; 22 துறைகளில் தலா ஒரே ஒரு ஆசிரியர் தான் இருப்பார்.

இவ்வளவு குறைவான ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாது. அதனால், ஒரு நாளைக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் 6 முதல் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலை மாறி, தினமும் 3 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அதற்கும் கூட போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், தினமும் குறைந்தது ஒன்று அல்லது இரு பாடவேளைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1857 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதன்பின் 168 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்புகள் ரத்து செய்யப்படும் நிலை சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டதில்லை. ரூ.30,000 ஊதியத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களாக தான் தினமும் ஓரிரு வகுப்புகளாவது நடைபெறுகின்றன.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், அப்துல்கலாம், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவரெட்டி ஆகிய 5 ஜனாதிபதிகள், நோபல் பரிசு வென்ற சர். சி.வி ராமன், கணிதமேதை ராமானுஜன் உள்ளிட்டோரை உருவாக்கிய சென்னைப் பல்கலை. பாடம் நடத்துவதற்குக் கூட ஆளில்லாமல் முடங்கிப் போகும் என்று அதை உருவாக்கியவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அவல நிலைக்குக் காரணம் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்கும் அளவுக்கு பல்கலைக்கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாததும்தான். சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் கூறப்படும் காரணம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை என்பதுதான். இந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் அதுதான் உண்மை ஆகும்.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கவும் மாணவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த நிதி பல்கலைக்கழகத்தின் பிற செலவுகளுக்கு திருப்பி விடப்படுவதால், மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களையும், தற்காலிகப் பட்டச் சான்றுகளையும் அச்சடிப்பதற்கு கூட நிதி இல்லை. அதனால் நடப்பாண்டில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இன்னொருபுறம், பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்களை வழங்க நிதி இல்லை. இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்ததையடுத்து, பல்கலைக்கழகத்தின் இரு கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.45.6 கோடி வைப்புத்தொகையை திரும்பப் பெற்றும், அரசிடமிருந்து ரூ.50 கோடியை பெற்றும், 465 ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.95.44 கோடி நிலுவைத் தொகையில் முதல் கட்டமாக ரூ.57.12 கோடியை நிர்வாகம் வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.38.31 கோடியை வழங்க மற்ற வைப்புத் தொகைகள் முதிர்ச்சியடையும் காலத்திற்காக பல்கலைக்கழக நிர்வாகம் காத்திருக்கிறது. இத்தகைய சூழலில் புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்று கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு உபரி நிதி இருந்து வந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தின் வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், ஊதியம் வழங்குவதற்கே வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த உபரி நிதிதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதே ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்திடம் நிதி இல்லாத நிலையில், வைப்பு நிதிகளும் வேகமாக குறைந்து வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட எந்த பல்கலைக்கழகத்தையும் நடத்த முடியாத நிலை உருவாகி விடும்.

கடந்த பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததுதான். பல்கலைக்கழகங்களை மீட்டெடுக்கப்போவதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த தி.மு.க.வின் ஆட்சியில்தான் பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியும், சீரழிவுகளும் அதிகரித்தன. அந்த வகையில் தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களை சீரழித்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிற பல்கலைக்கழகங்களின் நிதி நிலையை சீரமைக்க சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். அதை செய்யத் தவறினால் வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஷிய அதிபர் புதின் நாளை இந்தியா வருகை - டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - ரஷ்யா - இந்தியா இணைந்து எஸ் 500 ஏவுகணை தயாரிக்க திட்டம்

 

பதிவு: புதன்கிழமை,  டிசம்பர் 03, 2025, கார்த்திகை 17,  விசுவாவசு வருடம் 04-30: AM

புதுடெல்லி,

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார்.

இதனிடையே உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, புதின் மீது சர்வதேச கோர்ட்டு பிடிவாராண்டு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்தது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள கடந்த ஆகஸ்டு மாதம் புதின், அலாஸ்கா சென்றார்.

இந்தநிலையில் டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா-ரஷியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷியா அதிபர் புதின், நாளை (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். 2 நாள் பயணமாக டெல்லி வரும் புதின், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின்னர் பாரம்பரிய விருந்தில் கலந்து கொள்கிறார்.

ரஷிய-இந்திய மாநாட்டின்போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த முக்கிய ஆலோசனைகளும் நடைபெற உள்ளன. புதினின் வருகையையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவரது பயணத்​தின் போது ரஷ்​யா​வும் இந்​தி​யா​வும் இணைந்து அதிநவீன எஸ் 500 ஏவு​கணை​களை தயாரிப்​பது குறித்து முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட உள்​ளது.

இந்​திய - ரஷ்ய 23-வது வரு​டாந்​திர உச்சி மாநாடு டிசம்​பர் 4, 5-ம் தேதி​களில் டெல்​லி​யில் நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை டெல்​லிக்கு வரு​கிறார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புதினும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளனர். குறிப்​பாக பாது​காப்​பு, எரிசக்​தி, வர்த்​தகம், விண்​வெளி, அணுசக்​தி, தொழில்​நுட்​பம் குறித்து தலை​வர்​கள் இரு​வரும் விரி​வான ஆலோ​சனை நடத்த உள்​ளனர்.

ரஷ்​யா​விடம் இருந்து 5 எஸ் 400 ஏவு​கணை​களை வாங்க கடந்த 2018-ம் ஆண்​டில் மத்​திய அரசு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டது. இது​வரை 3 எஸ் 400 ஏவு​கணை​களை ரஷ்யா வழங்​கி​யிருக்​கிறது. மீத​முள்ள 2 தொகுப்​பு​கள் அடுத்த ஆண்​டில் ஒப்​படைக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த மே மாதம் இந்​தியா - பாகிஸ்​தான் இடையே 4 நாட்​கள் அதிதீ​விர போர் நடை​பெற்​றது. அப்​போது, இந்​தி​யா​வின் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது எஸ்​-400 ஏவு​கணை​கள் மிக முக்​கிய பங்கு வகித்​தன. குறிப்​பாக இந்​திய எல்​லை​யில் இருந்து 300 கி.மீ. தொலை​வில் பாகிஸ்​தான் வான்​பரப்​பில் பறந்த அந்த நாட்​டின் அதிநவீன உளவு விமானம் எஸ் 400 ஏவு​கணை மூலம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விடம் இருந்து கூடு​தலாக எஸ் 400 ஏவு​கணை​களை வாங்க மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. இதுதொடர்​பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் டெல்​லி​யில் நேற்று கூறும்​போது, “இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்​திப்​பின் போது பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும். இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யின்​போது எஸ் 400 ஏவு​கணை முக்​கிய இடம்​பிடிக்​கும்” என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்ய கூடாது என்று அமெரிக்கா நிர்​பந்​தம் செய்து வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு இந்​தியா அடிபணி​யாது. ரஷ்​யா​விடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்​ணெய் கொள்​முதல் செய்யப்படும். ரஷ்​யா​வின் எஸ் 400 ஏவு​கணை மூலம் சுமார் 400 கி.மீ. தொலைவு வரையி​லான இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும். அதிபர் புதினின் வரு​கை​யின் போது இந்த ஏவு​கணை​களை ரஷ்​யா​விடம் இருந்து கூடு​தலாக வாங்​கு​வது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும்.

அடுத்​தகட்​ட​மாக ரஷ்​யா​வின் எஸ் 500 ஏவு​கணை​களை இந்​திய விமானப் படை​யில் சேர்க்​க​வும் திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது. இதற்​காக ரஷ்​யா​வும் இந்​தி​யா​வும் இணைந்து எஸ் 500 ஏவு​கணை​களை தயாரிப்​பது குறித்து அதிபர் புதினுடன் பிரதமர் மோடி விரி​வான ஆலோ​சனை நடத்த உள்​ளார். இந்த ஏவு​கணை மூலம் 600 கி.மீ. தொலைவு வரையி​லான தரை, வான் இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும்.

ரஷ்​யா​விடம் இருந்து எஸ்​யு-57 ரக போர் விமானங்​களை வாங்​கு​வது தொடர்​பாக​வும் இரு தரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட உள்​ளது. இந்த போர் விமானங்​களுக்​கான தொழில்​நுட்​பத்தை இந்​தி​யா​வுக்கு வழங்க ரஷ்யா முன்​வந்​திருக்​கிறது. இதன்​படி எஸ்யு - 57 போர் விமானங்​கள் இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​படும்.

மேலும் ரஷ்​யா​வுக்கு சுற்​றுலா செல்​லும் இந்​தி​யர்​கள் விசா இல்​லாமல் அந்த நாட்​டுக்கு செல்​வது குறித்​தும் அதிபர் புதினும் பிரதமர் மோடி​யும் பேச்​சு​வார்த்​தை நடத்​த உள்​ளனர்​. இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

Tuesday, December 2, 2025

Madurai Malli, Jasmine price soars to over Rs.4500 per kg in Tamil Nadu

R.B.Udayakumar makes serious allegations, "Each polling station has more...

Former CM of Puducherry V.Narayanasamy Says, Congratulations on Sengotta...

Thirumavalavan Speech About SIR | Bar Association State Conference at Ma...

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் நாளை மகாதீபம் - குவியும் பக்தர்கள்

 

பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 02, 2025, கார்த்திகை 16,  விசுவாவசு வருடம் 07-30: AM

மகா தீபத்தன்று சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

இங்கு பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளையே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பெயர் சூட்டி அழைக்கப்படும் 2,668 அடி உயரமுள்ள மலையையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் காா்த்திகை தீபத்தன்று இந்த மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவை முன்னிட்டு தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. நாளை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.

தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள்.

மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போடமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீட்டின் முன்பும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். அந்தநேரம் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும்.

மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் அகல்விளக்குகள் ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தன்று சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக தீபத்தன்று அல்லது தீபத்திற்கு மறுநாள் பவுர்ணமி தொடங்கும். அதன்படி இந்த ஆண்டு 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.18 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.37மணிக்கு நிறைவடைகிறது. அதனால் நாளை முதல் 5-ந் தேதி வரையில் 3 நாட்கள் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். திருவண்ணாமலை நகரை சுற்றி இணைக்கும் புறவழிச்சாலைகள் உள்பட 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 130 இடங்களில் கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஒரு பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ் நிலையத்திற்கு செல்ல ஆட்டோ வசதி, இலவச பஸ் வசதி போன்றவை செய்யப்பட்டு உள்ளது. கோவில், கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ்நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட 231 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர். விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

எஸ்ஐஆர் விவகாரத்தைக் கிளப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

 

பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 02, 2025, கார்த்திகை 16,  விசுவாவசு வருடம் 06-50: AM

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் கபடி அணி ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமைதி காக்குமாறு அவைத்தலைவர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியபோது, மணிப்பூர் ஜிஎஸ்டி சீர்திருத்த மசோதா, புகையிலைப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா ஆகியவற்றை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்படி, புகையிலைப் பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. சிகரெட் மீதான கலால் வரி 2 மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது.

மசோதாக்களை அமைச்சர் தாக்கல் செய்து பேசியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோது, மணிப்பூர் ஜிஎஸ்டி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போதும் எஸ்ஐஆர் பணியைக் கண்டித்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் வெளிநடப்பு

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறையாக நேற்று மாநிலங்களவையை வழிநடத்தினார். இதையொட்டி, அவையின் சார்பில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்திப் பேசினர்.

பிறகு, பிற்பகலில் மாநிலங்களவை கூடியபோது, எஸ்ஐஆர் பணி குறித்து அவையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

‘எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், உடனடியாக விவாதம் நடத்துமாறு நிர்ப்பந்தம் செய்யக் கூடாது’ என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பிரதமர் மோடி அறிவுரை

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் பேசியதாவது: குளிர்கால கூட்டத்தொடர் வெறும் சடங்காக மாறிவிடக் கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் சிறப்பு கூட்டத்தொடராக அமைய வேண்டும்.

                                         
சமீபத்தில் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தையும், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியையும் பார்த்து உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.

பெரும்பாலும் தேர்தல்களுக்கான களமாகவோ அல்லது தேர்தல் தோல்விக்குப் பிறகு விரக்தியை வெளிப்படுத்தும் இடமாகவோ நாடாளுமன்றம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறையை மக்கள் ஏற்பது இல்லை. தேர்தல் தோல்வி விரக்தியால் நாடாளுமன்றத்தை முடக்கக் கூடாது. அதேநேரம், தேர்தல் வெற்றியின் ஆணவமும் இருக்கவே கூடாது. குளிர்கால கூட்டத்தொடர் சமநிலையுடன் இருக்க வேண்டும். அவையின் மாண்பை அனைத்து உறுப்பினர்களும் காப்பாற்ற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நாடகம் நடத்தக்கூடாது. வெற்று கோஷம் எழுப்பக்கூடாது. எதிர்ப்பு, எதிர்மறை என்பதெல்லாம் அரசியலுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும்போது நேர்மறை சிந்தனைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர வேண்டும். நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும். முக்கியமான, அர்த்தமுள்ள பிரச்சினைகளை மட்டுமே அவையில் எழுப்ப வேண்டும்.

எதிர்க்கட்சிகள் தங்கள் அணுகுமுறை, உத்தியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிறப்பாக செயல்படுவது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளேன்.

முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.பி.க்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகள், நாட்டின் வளர்ச்சி குறித்து பேச அனைத்து கட்சிகளும் உரிய வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் கூறினார்.

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புகழாரம்

நாட்டின் 15-வது குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மாநிலங்களவைக்கு அவர் முதல்முறையாக தலைமை தாங்கினார். அவருக்கு வாழ்த்து தெரி வித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:

மாநிலங்களவைக்கு முதல்முறையாக தலைமை தாங்கும் தங்களுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பகுதிதான். இளைஞராக இருந்தது முதல் தற்போது வரை சமூக சேவைதான் தங்களது முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. மிக எளிமையான வாழ்க்கையில் இருந்து நீங்கள் உயர் பதவிக்கு வந்திருப்பது நமது ஜனநாயகத்தின் வலிமையை காட்டுகிறது. உங்களது பணிவான தோற்றமானது சேவை, அர்ப்பணிப்பு, பொறுமையைப் பிரதிபலிக்கிறது.

குழந்தைப் பருவத்தில் நீங்கள் எதிர்பாராதவிதமாக அவிநாசி கோயில் குளத்தில் மூழ்கினீர்கள். ‘நான் மூழ்கியது மர்மமாகவே இருந்தது. என்னை யார் காப்பாற்றினார்கள்? எப்படி காப்பாற்றப்பட்டேன்? எதுவுமே எனக்கு தெரியாது. ஆனால் உயிர் பிழைத்தேன்’ என்று கூறியுள்ளீர்கள். அதேபோல, கோவையில் அத்வானி ரதயாத்திரையின்போது நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 60-70 பேர் கொல்லப்பட்ட நேரத்தில், நீங்கள் நூலிழையில் உயிர் தப்பினீர்கள். இந்த இரு சம்பவங்களிலும் இறைவன் அருள் இருப்பது தெளிவாக தெரிகிறது.

முதல்முறையாக காசிக்கு சென்று கங்கை அன்னையின் ஆசியை பெற்ற போது, ​​இனி அசைவம் சாப்பிட மாட்டேன் என்று சபதம் ஏற்றீர்கள். வாராணசி எம்.பி. என்ற வகையில் இந்த சம்பவம் எப்போதும் எனது நினைவில் இருக்கும்.

எந்த பொறுப்பை வழங்கினாலும், திறம்படச் செய்யக்கூடியவர். உங்களது பயணம் ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஊக்கம் தருகிறது. அவையின் பாரம்பரியத்தையும், தலைவரின் கவுரவத்துக்கும் அனைத்து உறுப்பினர்களும் மதிப்பளிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 02, 2025, கார்த்திகை 16,  விசுவாவசு வருடம் 06-40: AM

சென்னை,

சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் நகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்தநிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, சென்னையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (புதன்கிழமை) முதல் 5-ந்தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:-

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...