Friday, July 31, 2020

CPI State secretary R. Mutharasan Press Meet at Coimbatore | EIA 2020 |...

Thursday, July 30, 2020

Director Gowthaman Talk about Sri Lanka Election | 2020 Sri Lankan Parli...

Wednesday, July 29, 2020

50 கி.மீ வேகத்தில் சூறாவளி... திருவள்ளூர், வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

பதிவு: ஜூலை 28,  2020 03:20 PM

சென்னை,

திருவள்ளூர், வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை(30.07.2020) வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செய்யூர், தலைஞாயர், திருப்பூண்டி பகுதிகளில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், தாமரைப்பாக்கம், கொளப்பாக்கம் பகுதிகளில் தலா 9 செ.மீ மழையும், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம், ஆத்தூர், தேவலா பகுதிகளில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், அம்பத்தூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டிபகுதிகளில் தலா 7 செ.மீ, காரைக்கால், தர்மபுரி, தம்மம்பட்டி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tuesday, July 28, 2020

தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 28,  2020 07:25 PM

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து 6-வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியத்திற்கு அடுத்த படியாக தமிழகம் 2-ஆம் இடம் வகிக்கிறது.



Tamil Actor Shaam Arrested In Chennai For Gambling, Tokens Found At Flat...

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பாக கொண்டாட முஸ்லிம்கள் ஆர்வம்

பதிவு: ஜூலை 28,  2020 11:15 PM

அயோத்தி,

அயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், அதை சிறப்பாக கொண்டாட, முஸ்லிம்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில், ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிலையில், அயோத்தி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள், அடிக்கல் நாட்டு விழாவை, சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்து, பைசாபாத் மாவட்டத்தில் வசிக்கும், ஜாம்ஷத் கான் என்பவர் கூறியதாவது:



Monday, July 27, 2020

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று

பதிவு: ஜூலை 27,  2020 06:40 PM

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 5723 பேர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.



Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...