Saturday, July 25, 2020

கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி

பதிவு: ஜூலை 25,  2020 07:00 PM

சென்னை,

ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி  தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் லிப்ட்.

இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தில் ஓர் முக்கிய அங்கமாக இணைந்திருக்கிறார் நடிகை காயத்ரி ரெட்டி.  படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். இவர் பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். பிகில் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்ததைத் தொடர்ந்து தற்போது லிப்ட் படம் தனக்கு வேறொரு சிறந்த பரிணாமத்தைத் தரும் என்று நம்புகிறார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின்  கவின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் லிப்ட் . படத்தின் கதையம்சம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இப்படத்தை மிகச்சிறந்த படமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது

பதிவு: ஜூலை 25,  2020 05:05 PM

சென்னை,

வீட்டிற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.90 கோடி வழங்கியதை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது.




Friday, July 24, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று

பதிவு: ஜூலை 24,  2020 06:15 PM

சென்னை,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.




எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம்

பதிவு: ஜூலை 24,  2020 04:40 PM

சென்னை,

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பதிவு: ஜூலை 24,  2020 03:55 PM

புதுடெல்லி,




அதிமுக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள், நிர்வாகத் தோல்விகள் குறித்து விவாதிக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

பதிவு: ஜூலை 24,  2020 03:35 PM

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் திங்கள்கிழமை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 4 மாத கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அதே சமயம் இத்தகைய கொரோனா பேரிடர் காலத்தை பயன்படுத்தி அதிமுக அரசு மோசடிகளை செய்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக அதிக மின்சார கட்டணம் வசூலித்தல், கொரோனா மரணத்தில் பொய் கணக்கு எழுதுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக அரசு மீது முன்வைக்கப்படுகின்றன.