Wednesday, July 29, 2020

50 கி.மீ வேகத்தில் சூறாவளி... திருவள்ளூர், வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

பதிவு: ஜூலை 28,  2020 03:20 PM

சென்னை,

திருவள்ளூர், வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை(30.07.2020) வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செய்யூர், தலைஞாயர், திருப்பூண்டி பகுதிகளில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், தாமரைப்பாக்கம், கொளப்பாக்கம் பகுதிகளில் தலா 9 செ.மீ மழையும், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம், ஆத்தூர், தேவலா பகுதிகளில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், அம்பத்தூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டிபகுதிகளில் தலா 7 செ.மீ, காரைக்கால், தர்மபுரி, தம்மம்பட்டி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tuesday, July 28, 2020

தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 28,  2020 07:25 PM

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து 6-வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியத்திற்கு அடுத்த படியாக தமிழகம் 2-ஆம் இடம் வகிக்கிறது.



Tamil Actor Shaam Arrested In Chennai For Gambling, Tokens Found At Flat...

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பாக கொண்டாட முஸ்லிம்கள் ஆர்வம்

பதிவு: ஜூலை 28,  2020 11:15 PM

அயோத்தி,

அயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், அதை சிறப்பாக கொண்டாட, முஸ்லிம்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில், ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிலையில், அயோத்தி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள், அடிக்கல் நாட்டு விழாவை, சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்து, பைசாபாத் மாவட்டத்தில் வசிக்கும், ஜாம்ஷத் கான் என்பவர் கூறியதாவது:



Monday, July 27, 2020

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று

பதிவு: ஜூலை 27,  2020 06:40 PM

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 5723 பேர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.



தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த மாதமும் தொடருமா? - முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை

பதிவு: ஜூலை 27,  2020 09:10 AM

சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த மாதமும் தொடருமா என்பது குறித்து, எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.



Saturday, July 25, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று

பதிவு: ஜூலை 25,  2020 06:15 PM

சென்னை,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 7,758 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.



வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக பா.ஜ.க மாணவரணி தலைவர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார்

பதிவு: ஜூலை 25,  2020 07:30 PM

சென்னை,

பாரதிய ஜனதா கட்சியின் மாணவரணி அமைப்பான ஏ.பி.வி.பியின் தலைவர் சுப்பையா சண்முகம், தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்திருப்பதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சுப்பையா சண்முகம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துறை தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதே குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவருக்கும், சுப்பையாவுக்கும் வாகனம் நிறுத்துவதில் இட தகராறு ஏற்பட்டுள்ளது.





கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி

பதிவு: ஜூலை 25,  2020 07:00 PM

சென்னை,

ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி  தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் லிப்ட்.

இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தில் ஓர் முக்கிய அங்கமாக இணைந்திருக்கிறார் நடிகை காயத்ரி ரெட்டி.  படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். இவர் பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். பிகில் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்ததைத் தொடர்ந்து தற்போது லிப்ட் படம் தனக்கு வேறொரு சிறந்த பரிணாமத்தைத் தரும் என்று நம்புகிறார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின்  கவின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் லிப்ட் . படத்தின் கதையம்சம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இப்படத்தை மிகச்சிறந்த படமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது

பதிவு: ஜூலை 25,  2020 05:05 PM

சென்னை,

வீட்டிற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.90 கோடி வழங்கியதை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது.




Friday, July 24, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று

பதிவு: ஜூலை 24,  2020 06:15 PM

சென்னை,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.




எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம்

பதிவு: ஜூலை 24,  2020 04:40 PM

சென்னை,

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பதிவு: ஜூலை 24,  2020 03:55 PM

புதுடெல்லி,




அதிமுக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள், நிர்வாகத் தோல்விகள் குறித்து விவாதிக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

பதிவு: ஜூலை 24,  2020 03:35 PM

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் திங்கள்கிழமை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 4 மாத கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அதே சமயம் இத்தகைய கொரோனா பேரிடர் காலத்தை பயன்படுத்தி அதிமுக அரசு மோசடிகளை செய்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக அதிக மின்சார கட்டணம் வசூலித்தல், கொரோனா மரணத்தில் பொய் கணக்கு எழுதுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக அரசு மீது முன்வைக்கப்படுகின்றன. 



Thursday, July 23, 2020

"M.K.Stalin's family was the first millionaire family in Tamil Nadu" - K...

தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 23,  2020 06:30 PM

சென்னை,

தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




கொரோனா மரணத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பதில்

பதிவு: ஜூலை 23,  2020 04:10 PM

சென்னை,



அதிமுக அரசு கொரோனா மரணங்களை மறைத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பதிவு: ஜூலை 23,  2020 03:50 PM

சென்னை,



சீனா தனது சுயாதீன விண்கலத்தை இன்று வெற்றிகரமாக அனுப்பியது

பதிவு: ஜூலை 23,  2020 03:20 PM

பீஜிங்,

செவ்வாய் கிரக ஆய்வு போட்டியில் சீனா தனது முதல் சுயாதீன விண்கலத்தை இன்று வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.

செவ்வாய் கிரக ஆய்வில் போட்டி

சீனா இன்று  செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. சீனாவின் மிகப்பெரிய கேரியர் ராக்கெட், லாங் மார்ச் 5 மூலம் மதியம் 12:41 மணிக்கு அனுப்பியது. தெற்கு தீவான ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பியது.



தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பதிவு: ஜூலை 23,  2020 03:00 PM

சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



ராமர் கோவிலுக்கு ஆகஸ்ட்-5ல் அடிக்கல் நாட்டு விழா - அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு

பதிவு: ஜூலை 23,  2020 08:40 AM

அயோத்தி,

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 'விழாவில் பங்கேற்க, அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்' என, கோவிலை கட்டும், 'ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா'அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர், 9ல் அனுமதியளித்து உத்தரவிட்டது.



அம்பத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை

பதிவு: ஜூலை 23,  2020 08:25 AM

அம்பத்தூர்,

அம்பத்தூர் அருகே வீட்டு வாசலில் செல்போன் பேசி கொண்டிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.




Wednesday, July 22, 2020

தமிழகத்தில் இன்று 5,849 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 22,  2020 07:25 PM

சென்னை,

தமிழகத்தில் இன்று 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



G. K. Vasan from TMC(M) party takes oath as member of Rajya Sabha on Jul...

M. Thambidurai from AIADMK party takes oath as member of Rajya Sabha on ...

AIADMK K.P. Munusamy takes oath as Rajya Sabha MP from Tamil Nadu | Sicp

Tuesday, July 21, 2020

தமிழகத்தில் இன்று மேலும் 4,965 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 21,  2020 06:45 PM

சென்னை,

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,80,643 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,18,043-லிருந்து 11,55,191-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,497-லிருந்து 28,084 -ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,00,087-லிருந்து 7,24,577 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 587 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் மட்டும் கொரோனாவில் இருந்து 24,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மாநிலம் முழுவதும் தி.மு.க., சார்பில் போராட்டம்

பதிவு: ஜூலை 21,  2020 11:25 AM

சென்னை,

தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மாநிலம் முழுவதும் தி.மு.க., சார்பில் போராட்டம் நடந்தது. மின்கட்டண குழப்பங்களை நீக்கவும், கட்டண சலுகை வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது.

வீடுகளின் முன்பு கறுப்புக்கொடி ஏந்தியும், கண்டன முழக்கங்களுடனும் போராட்டம் நடந்தது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா பாதிப்பு

பதிவு: ஜூலை 21,  2020 10:55 AM

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரொனா

பதிவு: ஜூலை 21,  2020 10:35 AM

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Monday, July 20, 2020

வைகோ கண்டனம் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘‘விபச்சார விடுதி’’ என்று பதிவிடுவதா?

பதிவு: ஜூலை 20,  2020 09:10 PM

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘‘விபச்சார விடுதி’’ என்று பதிவிட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 95 ஆண்டுகளாக நாட்டின் விடுதலைக்கும், பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அரசமைப்புச் சட்ட வழியில் நின்று செயல்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் கட்சி ஆகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை மாநகர், தியாகராயர் நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அமைச்சருக்கே தெரியாமல் வெளியிட்டது குறித்து விசாரணை

பதிவு: ஜூலை 20,  2020 08:10 PM

சென்னை,

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அமைச்சருக்கே தெரியாமல் வெளியிட்டது குறித்து, பள்ளி கல்வி துறையில் விசாரணை துவங்கியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரானது.ஜூலை, 6ல், தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முடிவு செய்திருந்தார். இதற்காக, முதல்வர் அலுவலகத்தில் ஒப்புதல் கேட்டு, கோப்பும் அனுப்பப்பட்டது.ஆனால், மார்ச், 24ல் விடுபட்ட தேர்வை, மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்த, 780 மாணவர்களுக்கு தேர்வை நடத்திய பின், தேர்வு முடிவை வெளியிடலாம் என, தள்ளி வைக்கப்பட்டது. இந்த மறுதேர்வு, வரும், 27ல், நடக்க உள்ளது.


தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 20,  2020 07:30 PM

சென்னை,

தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



நந்திதா ஸ்வேதாவின் புதிய புகைப்படங்கள்


2 மணிநேரத்தில்12 கிமீ தூரம் ஓடி கொலையாளியை கண்டுபிடித்த மோப்ப நாய்

பதிவு: ஜூலை 20,  2020 02:45 PM

பெங்களூரு,

கர்நாடகாவில் துப்பறியும் நாயான துங்கா, 2 மணி நேரத்தில் கொலை நடந்த இடத்தில் இருந்து 12 கி.மீ தூரம் மோப்பம் பிடித்து சென்று குற்றவாளியை தேடிப்பிடித்துள்ளது. துங்காவின் செயலை மூத்த அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

கடந்த ஜூலை 10ம் தேதி, கர்நாடகா மாநிலம் டேவனகேரே அருகே உள்ள காஷிப்பூர் தண்டா பகுதியில் வசிக்கும் சேத்தன் மற்றும் சந்திர நாயக் உள்ளிட்ட நண்பர்கள், தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை திருடிச் சென்றனர்.



Sunday, July 19, 2020

Live : Pandavas gurukulam : Thirumuruga Kirupanandha Variyar Mahabharath...

தமிழகத்தில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று

பதிவு: ஜூலை 19,  2020 07:10 PM

சென்னை,

சென்னையில் இன்று ஒருநாளில் 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.



Minister MR Vijayabaskar distributes Kabasura Kudineer Powder and bodybu...

"Sasikala and their family are our enemy" Minister K.C. Veeramani | Tiru...

Saturday, July 18, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா தொற்று - 88 பேர் உயிரிழப்பு

பதிவு:  ஜூலை 18,  2020 07:25 PM

சென்னை,

தமிழகத்தில் இதுவரை இலலாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது.



TN Health Minister Vijayabaskar Review Meeting and Press Meet | Corona S...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு

பதிவு: ஜூலை 18,  2020 11:55 AM

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று வரை  10,38,716 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக அதிகரித்து உள்ளது.



Friday, July 17, 2020

Periyar statue desecration: TN CM promises action | Chief Minister K Pal...

தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 17,  2020 07:05 PM

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.



Minister Sengottaiyan in Press Meet | Plus Two results | CM EPS visit | ...

Karuppar Koottam Team Vs Public Live fight | Kandha Shashti Kavasam cont...

Wednesday, July 15, 2020

தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 15,  2020 07:45 PM

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது.



என். சங்கரய்யாவுக்கு இன்று தனது 99வது பிறந்தநாள்

பதிவு: ஜூலை 15,  2020 06:30 PM

சென்னை,

முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு 99-வது பிறந்தநாள்: ஆங்கிலேயருக்கு எதிராக இளம் வயதியிலே போராடியர்!!!



Tuesday, July 14, 2020

Dr. Meril Raj Government Doctor who treated a Kuwaiti Jallikkattu bull w...

Corona Coordination Committee Awareness Meeting | Madurai Nodal Officer ...

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 14,  2020 07:50 PM

சென்னை,

தமிழகத்தில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



Wholesale Vegetable Traders Seek Reopening of MGR Market | Coimbatore | ...

Karur collector T.Anbalagan Provided "Kabasura kudineer" | boost the bod...

Problem in carrying water from Cauvery river between two towns | Karur |...

Consultative meeting between police officers and trade union leaders | K...

Banana plantation in Coimbatore destroyed by fire due to lack of proper ...

முதல்-அமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது

பதிவு: ஜூலை 14,  2020 09:30 AM

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



ஸ்ரீலங்காவை சேர்ந்த கர்ப்பிணி பெண் சொந்த நாட்டுக்கு செல்ல தமிழக அரசு உதவ கோரிக்கை

பதிவு: ஜூலை 14,  2020 09:20 AM

கோவை,

ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் சந்திர மோகனா, பாஸ்கரன் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காக  கடந்த டிசம்பர் மாதம் அவரது தாயார் காந்திமதியுடன் கோவைக்கு வந்துள்ளனர்.



Monday, July 13, 2020

Sri Lankan Pregnant Woman Request Return to Her Home Country | Governmen...

Virus spreads, Codissia Complex to transform into 400-Bed Care Center | ...

Health Secretary J Radhakrishanan reviewed anti-COVID-19 measures being ...

The famous private textile shop was sealed for allegedly violating gover...

Health Secretary J Radhakrishanan, inspected the construction site of AI...

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்க திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளது - சுப்ரீம் கோர்ட்

பதிவு: ஜூலை 13,  2020 12:02 PM

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் உரிமைகளை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.



Tamil Nadu Kongu Ilaignar Peravai President Karventhan Press Meet at Kar...

பெப்சி சிவா வெளியிட்டுள்ள " கள்ளக்காதல் " குறும்படம் - தற்போது இணையத்தில் வைரல்

பதிவு: ஜூலை 12,  2020 10:20 AM

சென்னை,

"கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை" என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார மீறல் நம்மை தள்ளிவிட்டது.



இந்தியாவில் ஒரே நாளில் 28,701 பேருக்கு கொரோனா

பதிவு: ஜூலை 13,  2020 09:55 AM


புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


ஹோவ் யாங்கி - நேபாளத்தை கலக்கும் அழகிய தூதர்

பதிவு: ஜூலை 13,  2020 09:45 AM

காத்மாண்டு,

நட்பு நாடாக இருந்த நேபாளம், இப்போது சீனாவின் பேச்சை கேட்டு, இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பிரதமர் கே.பி.சர்மா ஒலி, நேபாள -- இந்திய எல்லையில், இந்தியாவிற்கு சொந்தமான சில பகுதிகளை, தங்களுடையது என சொல்லி, நேபாளத்தின் வரைபடத்தை மாற்றிவிட்டர். இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா கல்வி சான்றிதழும் போலி

பதிவு: ஜூலை 13,  2020 09:30 AM

திருவனந்தபுரம்,



Sunday, July 12, 2020

தமிழகத்தில் இன்று (ஜூலை 12) மேலும் 4,244 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவுக்கு 14 நீதிமன்ற காவல்



சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு

சென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் தற்போது வரை 17,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது

திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார்.

Friday, July 10, 2020

"The reason for the disappearance of the DMK is A.Raja and his 2G scanda...

Madurai’s new police commissioner Prem Anand Sinha assures no violent ac...

செவ்வாய் கிரகத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வாழ்ந்த வேற்றுகிரகவாசிகள்; கடவுள் வழிபாடும் நடத்தினர்

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வாழ்ந்து உள்ளனர்.அவர்கள் அங்கு கடவுள் வழிபாட்டையும் நடத்தி இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த பூமியில் உயிரினங்கள் எப்போது உருவாயின, தெரியுமா? 340 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் முதன்முதலாக இந்தப் பூமியில் உயிரினங்கள் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அப்போது முதலில் உருவான உயிரினம் எது என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தில் உருவான ‘ஸ்டி ரோமடோலிட்ஸ்’ என்ற பாக்டீரியாதான் என்று கை நீட்டுகிறார்கள், விஞ்ஞானிகள்.



கொரோனா தடுப்பு நடவடிக்கை - முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை நடத்தியது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் நேற்று புதிதாக 4,231 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்து உள்ளது.