South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Monday, July 27, 2020
தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த மாதமும் தொடருமா? - முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை
பதிவு: ஜூலை 27, 2020 09:10 AM
சென்னை,
தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த மாதமும் தொடருமா என்பது குறித்து, எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ந்தேதி (புதன்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கிறார்.
Sunday, July 26, 2020
"Video lessons for school students on 14 private channels" - Minister K ...
Rajinikanth ePass Controversy: Minister K.C.Karuppannan Press Meet | Med...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று
பதிவு: ஜூலை 26, 2020 06:30 PM
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2-வது நாளாக 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
Saturday, July 25, 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று
பதிவு: ஜூலை 25, 2020 06:15 PM
சென்னை,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 7,758 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக பா.ஜ.க மாணவரணி தலைவர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார்
பதிவு: ஜூலை 25, 2020 07:30 PM
சென்னை,
பாரதிய ஜனதா கட்சியின் மாணவரணி அமைப்பான ஏ.பி.வி.பியின் தலைவர் சுப்பையா சண்முகம், தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்திருப்பதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சுப்பையா சண்முகம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துறை தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதே குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவருக்கும், சுப்பையாவுக்கும் வாகனம் நிறுத்துவதில் இட தகராறு ஏற்பட்டுள்ளது.
கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி
பதிவு: ஜூலை 25, 2020 07:00 PM
சென்னை,
ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் லிப்ட்.
இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஓர் முக்கிய அங்கமாக இணைந்திருக்கிறார் நடிகை காயத்ரி ரெட்டி. படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். இவர் பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். பிகில் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்ததைத் தொடர்ந்து தற்போது லிப்ட் படம் தனக்கு வேறொரு சிறந்த பரிணாமத்தைத் தரும் என்று நம்புகிறார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின் கவின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் லிப்ட் . படத்தின் கதையம்சம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இப்படத்தை மிகச்சிறந்த படமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
Music Director Deva Press Meet | Pushpa 2 actor's Allu Arjun statement |...
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
TN CM EPS and OPS in Siddha hospital chennai
1 crore seed balls for the Ramanathapuram National Academy School