South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Tuesday, June 23, 2020
கொரோனா பாதிப்பு சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் 5,000-ஐ தாண்டியது
கொரோனா பாதிப்பு சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் 5,000-ஐ தாண்டியது
பதிவு: ஜூன் 23, 2020 02:40 PM
சென்னை,
சென்னையில் மண்டல வாரியாக பாதிப்பு விவரம்
Monday, June 22, 2020
Makkal Needhi Maiam Vice President Dr. R. Mahendran Birthday Celebrated ...
Sunday, June 21, 2020
நடிகர் அஸ்வின் குமார் டிரட்மில்லில் ஆடிய அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... : வாழ்க மகனே என பாராட்டிய கமல்
தமிழ் சினிமாவின் நடன நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். அவர் நடனத்திற்கு பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... பாடலுக்கு அவர் ஆடிய நடனத்தை பள்ளியில், கல்லூரியில் ஆடாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அந்த நடனம் புகழ் பெற்றது.
இப்போது அந்த நடனத்தை நடைபயிற்சி செய்யும் டிரட்மில்லில் நின்று கொண்டு ஆடியுள்ளார் நடிகர் அஸ்வின் குமார். இவர் துருவங்கள் பதினாரு படத்தில் அறிமுமானவர், தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். டிரட்மில்லில் நடனம் ஆடியிருப்பதோடு கமல்ஹாசன் போன்ற தோற்றத்திலும் இருப்பதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 64 பேருக்கும், கடலூரில் 102 பேருக்கும், திருவண்ணாமலையில் 77 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
"பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி...." - சீன விவகாரத்தில் ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசைச் சாடி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சரண்டர் மோடி என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.
Past & Present Thiruparankundram Murugan Temple | Subramanya Swamy Templ...
V. V. Rajan Chellappa MLA Provide Corona Relief Assistance for 300 civil...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
CA Foundation exams scheduled on Pongal, Su Venkatesan MP criticises Cen...
TN CM EPS and OPS in Siddha hospital chennai
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
1 crore seed balls for the Ramanathapuram National Academy School